Rasi Palan This Week: மேஷ ராசிக்கு தொழிலில் பிரகாசமான மாற்றம்.. புரோமோஷன் கன்ஃபார்ம்
Mesham Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு அற்புதமான ஏற்றத்தைத் தரும். மாதத்திற்கு ஒருமுறையாவது சென்று அகல்விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நன்மையைத் தரும். முதுகுத்தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
சுபவிரயம்
நிறைய சுப விரயங்கள் ஏற்படும். ஒரு மாதிரியான பதட்டம், கஷ்டங்கள் காணப்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தொழிலில் நல்ல ஒரு ஏற்றம் காணப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். பண வரவில் இருந்த பாதிப்புகள் நீங்கும்.
முன்னேற்றம்
சிறு சிறு தடைகள் வந்தாலும் எல்லா விதத்திலும் ஏற்றம் உண்டாகும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றககூடிய யோகம் உண்டு. வாரத்தின் தொடக்கம் மிகுந்த பாசிட்டிவாக இருக்கும். இடமாற்றங்கள் உண்டாகும். வீட்டில் சிறு சிறு வாக்குவாதங்கள் பெரியவர்களால் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பதவி உயர்வு
பதவி உயர்வு கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் அமரும்போது வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பெண்களுக்கு சாதகமான காலகட்டமாக இருக்கும். வண்டி வாகனங்களில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆண்களுக்கு வியாபாரத்தில் இணக்கம் ஏற்படும்.
வழிபாடு
புதன் வக்கிரமாக இருப்பதால் நண்பர்களுக்கும், உங்களுக்கும் தவறான கம்யூனிகேஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதில், மிகுந்த கவனமாக இருப்பது நன்மையைத் தரும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதாரம் 90 சதவீதமும் அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications