செவ்வாய் பெயர்ச்சி பலன்: மேஷ ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் நிச்சயம்.. 3 மாதத்தில் நடக்கும் மாற்றம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆக்ஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராசியாதிபதி, லக்னாதிபதி, அட்டமாதிபதியாகவும் செவ்வாய் பகவான் உள்ளார். இப்போது உங்கள் ராசிக்கு செவ்யாய் பகவான் 6 ஆம் இடம் எனும் கடன், நோய், எதிர்ப்பு, வம்பு, பகை இடத்தில் அமர்கிறார். கடனைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணங்கள் தோன்றலாம். தொழில் அபிவிருத்தி, வீடு, வண்டி, வாகனம் வாங்க கடன் வாங்கும் எண்ணம் உருவாகும்.
உங்கள் மனதெல்லாம் கடனைப் பற்றி மட்டுமே இருக்கும். கடந்த 3 மாதங்களாக செவ்வாய் பகவான் நீச்ச தன்மையில் இருந்தார். பின்னர், கேதுவுடன் இணைந்திருந்தார். இதனால் ராசியாதிபதி பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது, செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு அவர் 8 ஆம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்த்து பலப்படுத்துகிறார். சிந்தனைகள், எண்ணங்களில் சுறுசுறுப்பு மாறும்.
ஆற்றல்
அதிகாரம், மேலாண்மை சார்ந்த விஷயங்களை செயல்படுத்துவதற்கான ஆற்றல் உண்டாகும். வேகமாக, விரைவாக செயல்படுத்தக் கூடிய தன்மை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இந்தப் பெயர்ச்சி ஆன உடனேயே சூரியனின் நட்சத்திர சாரத்தில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார். ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும்.
மன அழுத்தம் நீங்கும்
6க்கு உரியவர் 6 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்தின் அதிபதியான சூரியனின் நட்சத்திர ஸ்தானத்தில் பயணிக்கும்போது கடனை அடைத்து முடிப்பீர்கள். கடனால் இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கும். கடனை அடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தோன்றும். உடல்நலனில் பிரச்சனை இருந்தவர்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.
வெற்றி
உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை இனம் கண்டுகொள்ளும் காலமாக இருக்கும். உங்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர்களை இனம் கண்டுபிடித்து வெற்றியடையக் கூடிய காலகட்டமாக இருக்கும். 6 ஆம் இடம் என்பது வேலையை குறிக்கக் கூடிய இடம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
பதவி உயர்வு
பதவி உயர்வு, அதிகாரம், நிர்வாகம் உங்கள் கையில் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கிறார். வீடு, வண்டி, வாகனம் ஆகியவை வாங்குவதற்கான கடன் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டை புதுப்பிப்பது, புனரமைப்பது, சுபகாரியங்கள் செய்யும் யோகம் உண்டாகும். கல்விக்காக கடன் வாங்கும் அவசியம் ஏற்படும்
வளர்ச்சி
தாய் உடல்நலத்தில் அக்கறை கொள்ளும் காலகட்டமாக அமையும். செப்டம்பர் மாதம் 3 முதல் 12 ஆம் தேதி வரை தனது சொந்த நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிப்பதால் உங்களுக்காக நீங்கள் வேலை செய்யத் தொடங்குவீர்கள். அந்த காலகட்டத்தில் அதிகாரம், நிர்வாகம், கட்டடம், ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு கூடுதல் வளர்ச்சியைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக அமையும்.
திடீர் அதிர்ஷ்டம்
நிலத்தை விற்பது, வாங்குவது, கட்டிய வீட்டை வாங்குவது, ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான நேரமாக இருக்கும். விவாசயம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம், அங்கு புதிய தொழில் தொடங்குவது, எதிர்பாராதா பண வரவுகள், பங்குச் சந்தை, லாட்டரி மூலம் தன வரவு உண்டாகும் வாய்ப்புள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications