Rasi Palan This Week: மேஷ ராசிக்கு ஏழரை சனியிலும் அடிக்கும் ஜாக்பாட்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். தைரியத்துடன் முன்னோக்கி செல்லக்கூடிய காலகட்டமாக இருக்கும் எடுத்த காரியத்தில் வெற்றிகள் பெறும் யோகம் உண்டு. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சிக்கல் படிப்படியாகத் தீரும். எதிர்பார்த்த அனுகூலம் பெரிய அளவுக்கு ஏற்படும்.
லாபம், முன்னேற்றம்
பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் அணுசரணையாகச் செல்வது நல்லது. தொழில், உத்தியோகத்தில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய் வழி உறவு, தந்தை வழிஉறவு மேன்மை ஏற்படும். பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.
சொந்த தொழில்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கி மனதிருப்தி அடைவீர்கள். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். நீண்ட நாட்களாக கூட்டுத் தொழில், தனிப்பட்ட அடிமைத் தொழிலில் இருந்து வெளிவந்து தங்கள் திறமைகளை காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்திருப்பீர்கள். இனி அதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
மன அழுத்தம்
ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் தேவையில்லாத குழப்பிக் கொண்டு, அச்சமடைந்து, மன அழுத்தத்துக்கு உள்ளாகாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம், நண்பர்களிடம், உறவினர்களிடம் பேசாமல் இருப்பது போன்றவற்றை செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு நடப்பதற்கான நல்ல காலகட்டமாக இருக்கும்.
பண வரவு
பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறும் நல்ல யோகம் ஏற்படும். தொட்டது துலங்கும் காலம் என்பதால் தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் மகிழ்ச்சியாக இருப்பது நன்மை பயக்கும். தொழில் தொடங்கும் யோகம் உள்ள நல்ல காலகட்டம். குடும்பத்தில் உங்களது
பரிகாரம்
அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை கண்டிப்பாக படிப்பதோ, கேட்பதோ நல்லவிதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவது நல்லது. வயிறு, கால் வலி, முதுகு வலி தொடர்பான உடல் உபாதைகளில் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications