Rasi Palan This Week: மேஷ ராசிக்கு தடைகளை தகர்த்தெறியும் காலம்.. கெத்தாக மாறப் போறீங்க
வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். எதிரிகள் விஷயத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களின் அதிரடி செயல்பாடு காரணமாக எதிரிகள் அமைதியாவார்கள். தொலைதூர பயணங்கள் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் ஏற்றம் காணப்படும். தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் தேடி வரும்.
அந்தஸ்து
சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நடைபெறும். கடின உழைப்பு, புத்தி கூர்மையால் இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் படிப்படியாக தீரும். தொழிலிலும் ஏற்றம் காணப்படும். முதலீடு சார்ந்த தடைகள் விலகும்.
வெற்றி
மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதனால் தொழிலில் முன்னேற்ற பாதையில் பயணிப்பீர்கள். வீடு, நிலம், வண்டி, வாகனம் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகள் சேர்க்கை இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது. விவசாயிகளுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் அந்யோநியம் அதிகரிக்கும். காதல் உறவில் வெற்றி உண்டாகும்.
கவனம்
முன்கோபம், பதற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் நிதானமாக செயல்படுவது வெற்றியை தரும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். குழந்தைகளிடம் கோபம் காட்ட வேண்டாம். குழந்தைகளை தட்டிக் கொடுத்து வழிநடத்த வேண்டும். கோபத்தைக் காட்டினால் தேவையில்லாத பிரச்சனைகள், மனத்தாங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர் வழி உறவிலும் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்
வீண் விவாதம் தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கை வேண்டும். அலர்ஜி, சளி, காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. உங்கள் வீடு அருகே உள்ள பெருமாள் கோயில் சென்று வழிபாடு செய்வது, நரசிம்மர் கவசம் செய்வது பிரச்சனைகள் இருந்து தீர்வை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications