Mesham Rasi Palan: மாசி மாதத்தில் மேஷ ராசிக்கு நடக்கப் போவது என்ன?.. முழு விவரம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் மேஷ ராசியினருக்கு (Mesham Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் மேஷ ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மாசி மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். நிறைய லாபங்கள் கிடைக்கக் கூடியதாகவும், பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாகவும் இருக்கும். அதிர்ஷ்டங்கள் அற்புதமாகக் கிடைக்கும். நிறைய பேருக்கு கல்லூரிகளில் சீட் கிடைக்கும். தீசிஸ் சப்மிட் செய்வது, பிஎச்டி கிடைப்பது, பதவி உயர்வு, சலுகைகள் கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும்.
சுற்றுலா செல்லும் யோகம்
அண்ணன், தம்பிகளுக்கு திருமணமாகும் யோகம் உண்டாகும். பெரிய சந்தோஷமான இடங்கள், சுற்றுலா செல்வது, நண்பர்களுடன் செல்வது போன்ற யோகம் உண்டாகும். கோயில்களுக்குச் செல்வது, படிப்பில் பெரிய இடத்துக்குச் செல்வது போன்ற அமைப்புகள் உண்டாகும். மேஷத்திற்கு மாசி மாதம் முழுக்க முழுக்க ஆச்சரியமான மாதமாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்கள் தடையின்றி நடக்கும்.
வெற்றி நிச்சயம்
எந்தவொரு குழப்பமும் இல்லாமல், எடுக்கும் முடிவுகளில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். எல்லாருடைய நட்பும் கிடைக்கும். எதிரிகளே இல்லாமல், நட்பாக மாறுவார்கள். உங்களுடைய நண்பர்கள் எல்லோரும் உங்களுக்கு வேண்டியதைச் செய்வீர்கள். நினைத்ததை விட பல விஷயங்கள் சாதகமாக நடக்கும்.
அற்புதமான மாதம்
பாசிட்டிவான மாதமாக இந்த மாசி மாதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கட்டாயமாக கிடைக்கும். அலுவலகத்தில் கார்ப்பரேட்டில் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு துணைத் தலைவர், இயக்குநர் போன்ற பதவிகள் கிடைக்கும் யோகம் உள்ளது. நிறைய பொறுப்புகள், துறைகள் உங்களுக்கு கீழ் வரும்.
வழிபாடு
மேஷ ராசியினர் பலருக்கு திருப்திகள், லாபங்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், உண்மைகள் வெளியில் தெரியவரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்வது, ஹயக்ரீவர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications