ஆடி மாத பலன்: மிதுன ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கடக ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ பழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அருகில் இருக்கும் கோயில்களில் அம்பாள் வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, கழுத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுடைய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், சவால்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
குடும்பம்
உங்களுடைய வாழ்க்கைத் துணையின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் காலமாக இருக்கும். பெற்றோர், பெரியோருக்கும் உங்களுக்கும் இருந்த பிரச்சனைகள் சரியாகும். அவர்களுடைய நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் ரீதியாக இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும்.
முன்னேற்றம்
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அடுத்தடுத்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த ஆடி மாதத்தில் வார்த்தையில் மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது. பற்கள் விஷயத்தில் வரும் பிரச்சனைகளை அலட்சியப்படுத்தாமல் உரிய மரத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
கவனம்
மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்களும், உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடாமலும் பார்த்துக் கொள்வது நல்லது. மருந்து சாப்பிடும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உணவு தொடர்பான விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. உங்கள் ராசிநாதன் புதன் ராசியிலேயே வக்கிர நிலையில் உள்ளார்.
ஆரோக்கியம்
ராசிநாதன் வலுவிழந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அவ்வபோது பிரச்னைகள் வந்து செல்லும். குரு பகவானும் ராசியில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் சூரியன் இருக்கிறார். உத்யோகம், தொழிலில் இட மாற்றம் நிகழும். எல்லாவற்றிலும் நன்மை பெருகும். திருமண தடை நீங்கி திருமண யோகம் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.












Click it and Unblock the Notifications