Rasi Palan This Week: மிதுன ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. வீடு, நிலம், வாகனம் எல்லாமே அதிர்ஷ்டம்
Mithunam Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மிதுனத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இந்த வாரத்தில் அற்புதமான அமைப்புகள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் நீண்ட நாள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகள், குடும்பம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.
சுபகாரியம்
அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும் அமைப்பு ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். நினைத்த காரியங்கள் நடப்பதற்கான யோகம் ஏற்படும். தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் பாதிப்புகள் நிவர்த்தியாகும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் தீரும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். எடுத்த காரியங்களில் வெற்றிகளைக் குவிக்கும் யோகம் உண்டாகும்.
சொத்துகள்
வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். 7, 8 ஆம் தேதி நன்றாக இருக்கும். வண்டி வாகனங்கள் மாற்றுவது, உங்கள் பெயரில் அக்கவுண்ட் தொடங்குவது, டெப்பாசிட் போடுவது போன்ற யோகம் ஏற்படும். திட்டமிட்டு எல்லா காரியங்களையும் அடைத்து முடிப்பீர்கள். வெற்றிகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும் என்பதால் இந்த வருடத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
சிக்கல் தீரும்
உத்தியோக ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பலவிதமான சிக்கல்கள் தீரும். மேலதிகாரிகளின் நம்பிக்கை ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். சுபவிரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய கடன்களை வாங்கி மகிழ்வீர்கள். சந்தோஷமான கடன்கள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வழிபாடு
ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவான், சிவன் கோயில்களில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். புதன்கிழமை தோறும் ஏழைகளுக்கு சாதம், எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.














Click it and Unblock the Notifications