Rasi Palan This Week: மிதுன ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பழைய கடன்களைத் தீர்க்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கழிவுப் பாதையில் சிறிதாக வரும் பிரச்சனைகள் கூட பெரிதாக மாறும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தொடர்ச்சியாக இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். தொழில் ரீதியாக இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், பதவி உயர்வு மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும்.
பதவி உயர்வு
பதவி உயர்வுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தைரியம் பிறக்கும். ஞானமார்க்கங்கள் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து காரியங்களும் இனி அடுத்தடுத்து நடக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் இனி படிப்படியாக மாறும். உத்தியோகத்தில் நல்ல உயர்வும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
பாக்கியம்
தொழில் சார்ந்த விஷயங்களில் தைரியமாக ரிஸ்குகளை எடுக்கலாம். மருத்துவமனை அல்லது வெளி இடங்களுக்குச் சென்று புத்துணர்வுடன் திரும்பும் பாக்கியம் ஏற்படும். வழக்குகளில் வெற்றிகள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடுபொடியாகும்.
தொழில்
தொழில் ரீதியாக நல்ல அனுகூலங்கள் காணப்படும். புதிய முயற்சிகளில் இருந்து வந்த கஷ்டங்கள், சிக்கல்கள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலம் காணப்படும். தாய் வழி உறவுகளில் ஏற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
கடன்களில் இருந்து விடுதலை பெறும் யோகம் ஏற்படும். நல்ல மாற்றங்கள் அபரிமிதமாக ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றங்களும், லாபமும் ஏற்படும். தாய் வழி உறவு ஏற்றத்தைப் பெறும். மிதுன ராசியினருக்கு துர்க்கை வழிபாடு நிம்மதியைக் கொடுக்கும். துர்க்கை மந்திரங்களை படிப்பது, கேட்பது நல்ல அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications