Rasi Palan This Week: மிதுன ராசியை சுழற்றியடிக்கும் கிரகங்கள்.. வச்சு செய்யப் போகுது
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு அஷ்டமத்தில் கிரகங்கள் சேருவது நல்லது கிடையாது. 15 ஆம் தேதிக்குப் பிறகு தேவையில்லாத பிரச்சனைகள், சண்டைகள், வம்பு, வழக்குகள், எதிர்பாராத விபத்துகள், தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், கால் முட்டியில் அடிபடுவது, என்ன செய்தாலும் நமக்கு எதிராக மாறுவது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளையார்பட்டி விநாயகரை நினைத்துக் கொண்டு அருகிலிருக்கும் தேங்காய் உடைத்துவிட்டு வேலைகளைத் தொடங்குவது நல்லது. இந்த மாதத்தில் பலமான ஸ்தானங்கள் உள்ளன. அஷ்டமத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், அடுத்த வாரம் புதன், சந்திரன் ஆகிய கிரகங்களும் இணைவது பெரிய நன்மையைத் தராது.
கவனம்
கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகள், பிடிவாரண்ட் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. இரவு நேரங்களில் பயணங்களின்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் போலீஸில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. வேலைப் பளு அதிகமாக இருப்பதால் உங்களுடைய ஆரோக்கியம், உங்களுடன் இருப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும்.
ஆரோக்கியம்
நண்பர்கள் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புள்ளது. நண்பர்களுக்கு ஜாமீன் கையெழுத்துப் போடாமல் இருப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சகோதரர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்களது நல்ல மனதை புரிந்து கொள்ளாமல் ரகசியங்களை மறைப்பார்கள். பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் வராமாக இருக்கும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும்,பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதமும் ஏற்றம் பெறுவீர்கள்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications