Rasi Palan This Week: மிதுன ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mithunam-rasi-palan-what-kind-of-benefits-that-mithunam-gemini-signs-will-get-from-october-6-to-1

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படும் நல்ல காலகட்டம். தொழில் ரீதியாக அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் தடைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக நீங்கும்.

அனுகூலம்

பெற்றோர், பெரியோரின் அனுகூலம் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். பெற்றோர், பெரியோரின் அனுகூலம் ஏற்படும். சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் அதி அற்புதமான யோகங்கள் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

கோபம் வேண்டாம்

பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் அனுசரனையாக பேசி தீர்ப்பது நல்லது. அவர்களைத் திட்டுவது, சபிப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் நீச்சமாக இருப்பதால் திட்டுவது, சபிப்பதால் எதிர்மறையான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

யோகம்

விஷ்ணு காயத்ரி கேட்க கேட்க சிக்கல்கள் இல்லாமல் சந்தோஷம் ஏற்படும். மிதுன ராசிக்காரர்கள் எந்தவிதமான மாற்றங்கள் வந்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வது அடுத்தடுத்து முன்னேற்றங்களை ஏற்படுத்தும். மார்ச் மாதம் முதல் நல்லவைகள் அனைத்தும் நடக்கும். அதிகளவிலான பயணங்களை மேற்கொள்வீர்கள். யோகம் நிறைந்த மாதமாக இருக்கும்.

வழிபாடு

வியாழக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். மகான்கள் வழிபாடு செய்வது மேன்மையைத் தரும். சுக்கிரன் சிறிது கெட்டுப் போயிருப்பதால் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சாப்பாடு, எலுமிச்சை சாதம் தானமாக கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும், அநாவசியமான செலவுகள் குறையும். இல்லையெனில் தேவையில்லாத செலவுகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+