Rasi Palan This Week: அடித்தாடும் மிதுன ராசி.. தொட்டதெல்லாம் தூள் பறக்கும் யோகம்
வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை தொடர்பான விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் பலப்படும் அமைப்பு உள்ளது. சளி தொடர்பான பாதிப்பில் கவனம் தேவை. வழக்கு போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேம்படும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றங்கள் என அனைத்து விதமான மாற்றங்களும் உங்களுக்கு ஏற்படும்.
அனுகூலம்
உறவுகளுக்கு மத்தியில் இருந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். தனிப்பட்ட முறையில் யோகம் உண்டாகும். புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். நினைத்த காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். எல்லா விதமான வெற்றிகளும் வாழ்க்கையில் ஏற்படும். யோகமும், சந்தோஷமும் கிடைக்க பெருமாள் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக இருக்கும்.
குழப்பங்கள் வேண்டாம்
அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் பெரிய மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். ஆத்ம ரீதியான மன சந்தோஷம் ஏற்படும். மன அழுத்தங்கள் குறையும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். மலைக் கோயில்களுக்குச் செல்லக்கூடிய பாக்கியம் ஏற்படும்.
நண்பர்கள்
மனம் தெளிவு பெறும். பழைய நண்பர்களை சந்திக்கக்கூடிய அற்புதமான காலகட்டம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் குறையும். வேகமாக பல காரியங்களை காய் நகர்த்துவீர்கள். பதவிகள் தானாக தேடி வரும்.
வீடு, நிலம் வாங்கும் யோகம்
வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். மணப்பெண், மணமகன் கிடைக்கும் யோகம் உள்ளது. கணவர் பெயரில், மனைவி பெயரில் வீடு வாங்குவீர்கள். வெளிநாட்டுக்கு சென்று செட்டிலாகும் யோகம் உண்டாகும். சண்டைகள் போடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனதில் அந்நியோன்யம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications