Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. இந்த வாரம் எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mithunam-rasi-palan-what-kind-of-benefits-that-mithunam-signs-will-get-from-dec-28-to-jan-4

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம் நன்றாக இருக்கும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எல்லா விதமான நன்மைகள் நடந்தாலும் மனதில் ஒருவிதமான இனம்புரியாத பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

அனுகூலம்

கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. கணவன், மனைவியிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் அவர்களிடம் சரணடைவது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும்.

முயற்சிகளில் வெற்றி

செல்வாக்குகள் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உள்ளது. பயணம் மேற்கொள்ளும்போது ஆண்கள் விஷயத்திலும், பெண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகள் பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தும். யோக பலன்கள் அதிகளவில் இருக்கும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

மற்றவர்கள் விஷயத்தில் கவனம்

பிறர் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் இருப்பது நன்மை பயக்கும். திருமண பேச்சுவார்த்தையில் சுணக்கங்கள் காணப்படும். காதல் அமைப்பில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான பயணங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும்.

வழிபாடு

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு சிறந்த பரிகாரமாகும். இடதுபக்க தேக ஆரோக்கியம், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+