March Matha Palan: மிதுன ராசிக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்.. புரோமோஷன் கன்ஃபார்ம்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும். குழப்பமாகவே இருந்து கொண்டிருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். அற்புதமான மாற்றங்களும், முன்னேற்றமும் ஏற்படும். இந்த ஆண்டில் வரும் குருப்பெயர்ச்சியில் இருந்து மிதுன ராசிக்கு நல்ல நல்ல மாற்றங்கள் ஏற்படும். குழப்பத்தில் இருந்து தெளிவு பெறுவீர்கள்.
புரோமோஷன்
சுக்கிர பகவான் 10 ஆம் இடத்தில் சனியோடு இணைவதால் பெயர், புகழ், அந்தஸ்து, திடீர் அதிர்ஷ்டம், குழந்தை பாக்கியம், லாட்டரி அடிப்பது, கீர்த்தி, சொல்வாக்கு, செல்வாக்கு, காதல் என சகலவித யோகங்களும் கிடைக்கும். அடையாளம், அங்கீகாரம், கெளரவம், தன்னம்பிக்கை உண்டாகும் நல்ல அமைப்பு உள்ளது. வேலையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
முதலீடுகள் பெருகும்
வேறு வேலை மாறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றம், பண மாற்றம் உண்டாகும். பணத்தை முதலீடு செய்வீர்கள். புதிய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். சொத்து வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பாட்னர்ஷிப் மூலம் லாபம் கிடைக்கும். ஆளுமை உண்டாகும். அடுத்தகட்டத்தை நோக்கி தைரியமாக செல்வீர்கள். வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சொல்லிக் கொண்டிருந்த அமைப்புகள் அனைத்தும் நீங்கும்.
குரு பார்வை
குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் 1, 5, 9 ஆம் இடம் இயங்க ஆரம்பிக்கும். சிந்தனை, செயல் அதிகரிக்கும். புனர்பூஷம் நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பிப்பீர்கள். கடவுளின் பரிபூரண அருள் கிடைக்கும். ராசிநாதன் வக்கிரமானாலும் பெரிய பாதிப்புகள் இல்லை.
புதிய வேலைவாய்ப்பு
வணிகத்தில் லாபம், முதலீட்டில் ஆதாயம், நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வீர்கள். கோயில்களில் கைங்கரியம் செய்வீர்கள். முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். டிஜிட்டல் கோல்டு, டிஜிட்டல் மார்க்கெட்டில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பங்குச்சந்தையில் இந்த மாதத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. வீண் விரயம் ஏற்படுவதற்கான அமைப்புள்ளதால் கவனம் தேவை.
சேமிப்பு
ஆரோக்கியம் மேம்படும். வராத பணம் வந்து சேரும். தொழிலில் மேன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலமாக இருந்து வந்த கலக்கங்கள் தீரும். நிம்மதி கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். சேமித்து வைக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கவனம்
ரகசிய உறவுகள் இருப்பவர்கள் வீட்டில் சிக்கும் சூழல் உள்ளது. உண்டியலில் காசு சேர்த்து வைக்கும் யோகம் உண்டாகும். வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை. மற்றவர்களிடம் தேவையில்லாத விஷயங்களைப் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வருமானங்களைப் பெருக்கி கொள்வீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications