Mithunam Rasi Palan: தடைகளை தகர்த்தெறியும் மிதுன ராசி.. சொத்துகள் வாங்கும் யோகம்
Chithirai matha palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், மிதுன ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் நாளை அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம் (Mithunam Rasi Palan)
மிதுன ராசியினருக்கு அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். புதிய பொறுப்புகள், புதிய கெளரவங்கள் ஏற்படும் யோகம் உண்டு. அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகப்பெரிய ஏற்றத்தைப் பெறுவீர்கள். பண வரவில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
தடை நீங்கும்
பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். துணையின் நீண்ட நாள் சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். ஆச்சரியமான முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூரில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். விடுபட்ட மகான்கள் தரிசனம் ஏற்படும். யாத்திரைகள் செல்லும் சமயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெயிலில் அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, மண் வாங்குது, முதலீடு செய்வது, கட்டடம் கட்டுவது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்ற யோகம் உண்டாகும். யோகம், சந்தோஷம், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சனைகள், பணம் சார்ந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். உத்தியோக ரீதியாக ஏற்றம் ஏற்படும்.
சவால்கள்
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். சொத்துகளை வாங்கும் யோகம் உண்டு. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த சவால்கள், பாதிப்புகள் அனைததும் பரிபூரணமாக நீங்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அபரிமிதமான லாபங்கள் ஏற்படும்.
வழிபாடு
உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். ஏற்றம் நிறைந்த காலகட்டம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய் பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications