Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. நல்ல நேரம் ஆரம்பம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கடன் தீரும். பணவரவு உண்டாகும். நீண்டநாட்களாக பணம் வரவில்லை என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிலைமை வரும். நிலம், ஆவணங்கள், அருகில் உள்ள பிரச்சனைகள் போன்றவை தீரும் யோகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றிகள் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
ஜாக்பாட்
அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய ஏற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு திடீரென நல்ல பதவிகள் கிடைக்கும். குரு அதிசாரத்தில் இருப்பதால் தொழில் அற்புதமாக இருக்கும். அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு போன்றவை நன்றாக இல்லையென கவலைப்படத் தேவையில்லை. அற்புதமான ஜாக்பாட் உண்டாகும்.
ஆரோக்கியம்
ஆச்சரியமான முன்னேற்றங்கள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. கார்த்திகை மாதத்தில் ஒருநாள், இருநாள் அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தெம்பாக வரும் யோகம் ஏற்படும். கண், காது, மூக்கு, தொண்டையில் உள்ள பிரச்சனைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
அனுகூலம்
மகான்களை வழிபாடு செய்வது அற்புமான யோகத்தைக் கொடுக்கும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். உத்தியோகத்தில் அற்புதம் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், வியாபார மாற்றம் போன்ற அனைத்துவித நல்ல மாற்றங்களும் உண்டாகும். படிப்பில் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அதுபோன்ற நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.
நிலத்தில் யோகம்
நிலத்தில் பெரிய ஜாக்பாட் அடிக்கும் யோகம் உண்டாகும். வயிறு, கழிவுப் பாதை, மலக்குடல், ஏப்பம், முதுகு, மறைவு ஸ்தானம் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications