Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. வாழ்க்கையையே மாற்றும் 1 விஷயம்.. ரொம்ப கவனம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு (Mithunam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பாக்கிய ஸ்தானம் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு வேண்டியவை எல்லாம் நடக்கும் காலகட்டம். அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பொற்காலமாக இந்த காலகட்டம் இருக்கும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். பெரிய பெரிய பிரச்சனைகள் ஓயும். மனதிடம் நன்றாக இருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
புதிய விஷயங்கள், முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது, ஆலயங்கள் கட்டுவது, ஆலயத்திற்கு நிலம் கொடுக்கும் வாய்ப்புகள் ஏற்படும். சொந்த ஊரில் உள்ள சொந்த கிராமங்களில் உள்ள கோயிலுக்குச் சென்று வரும் யோகம் உண்டு. தீர்த்த யாத்திரைகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும்.
வெளிநாடு யோகம்
ஆண் குழந்தைகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். வாரிசு தொடர்பான புண்ணியங்கள் வந்து சேரும். புதிய விஷயங்களில் நின்று ஜெயிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு, தூரதேசப் பிரயாணம், வெளிநாட்டில் செட்டிலாவது, வேலை கிடைப்பது போன்றவை உண்டாகும். மாசி மாதம் முழுக்க பண வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
கவனம்
வேலையில் மட்டும் மிகுந்த கவனம் தேவை. எல்லா விஷயங்களும் நன்றாக இருந்தாலும் வேலையில் கவனச் சிதறல், பாதிப்புகள், இடையூறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அற்புதமான யோகம் உண்டாகும். சந்தோஷம் 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 60 சதவீதம் நன்றாக இருக்கும்.
வழிபாடு
எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அற்புதமான காலகட்டம் என்பதால் இதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேலையில் அதீத கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். மற்றபடி யோகம் தரக்கூடிய மாதமாக இந்த மாசி மாதம் உங்களுக்கு அமையும். அருகில் இருக்கும் கிருஷ்ணர், பெருமாள் கோயில்களுக்குச் சென்று துளசி தீர்த்தம் குடித்து வருவது நல்ல முன்னேற்றத்தையும், மேன்மையையும் ஏற்படுத்தும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications