Mithunam: மிதுன ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. இனி தொட்டதெல்லாம் துலங்கும் நேரம்

Subscribe to Oneindia Tamil

March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மிதுனம் ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும்.

mithunam-rasi-palan-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-during-this-march-month

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம் மார்ச் மாத பலன்

மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் அருமையான முன்னேற்றத்தைக் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கும். ராசியும், ராசிநாதனும் 9 ஆம் இடங்களோடு குருவோடு தொடர்பு கொண்டருக்கினர்னர். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். சில பேருக்கு தெய்வ பக்தி, அனுகூலம் அதிகமுள்ள தன்மை ஏற்படும். தெய்வ பக்தி, தெய்வ அனுகூலம் அதிகரிக்கும் நல்ல காலகட்டம்.

ஆன்மீக தலம்

9 ஆம் பாவம் ராசிநாதனுடைய இருப்பால் மிகப்பெரிய சுபத்தன்மையை அடைந்துள்ளது. போக வேண்டும் என்று விரும்பிய கோயில்கள், இடங்கள், சித்தர் கோயில்களுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். கெளரவம் உயரக்கூடிய அமைப்புள்ளது. இதுவரைக்கும் முடிக்க முடியாத சில விஷயங்களை இந்த காலகட்டத்தில் நடத்தி முடிப்பீர்கள்.

யோக பலன்கள்

பாக்கியாதிபதியான சனி பகவான் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். மாதத்தின் இறுதியில் 15 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் உச்சமாகி 10 ஆம் இடத்தை தொடர்பு கொள்வதால் யோக பலன்களை அள்ளிக் கொடுக்கும். கலைகள் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள், கலைத் திறமை கொண்டவர்கள், எழுத்து திறமை கொண்டவர்கள், சினிமாவில் சாதிக்க வேண்டும், யூடியூபில் சாதிக்க வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு முன்னேற்றத்தைத் தரும் காலகட்டமாக இருக்கும்.

நல்லவை நடக்கும்

மிகப்பெரிய மாற்றங்கள், நல்ல முன்னேற்றங்கள், வருமானம் தரக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையும். கடந்த காலங்களில் எவை சரியில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தீர்களோ அந்த விஷயங்கள் எல்லாம் படிப்படியாக மாறும். நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். பெண்களால் வீண் பழி சுமத்தப்பட்டவர்களுக்கு எல்லாம் இனி பெண்கள் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் உண்டாகும்.

சுபகாரியம்

எல்லா விஷயங்களிலும் நன்மைகள் பெறும் காலகட்டம். வீட்டில் மங்களச் சத்தம் கேட்கும். சுப காரியங்கள் எல்லாம் உங்கள் வீட்டில் நடக்கும். அதற்காகன அடிப்படை விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இந்த மார்ச் மாதம் அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+