Mithunam: மிதுன ராசிக்கு வரிசைகட்டி நிற்கும் பிரச்சனைகள்.. 1 மண்டலத்துக்கு ரொம்ப கவனம்
சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசி, லக்கினக்காரர்களுக்கு 4 ஆம் இடம் என்பது சுக ஸ்தானம். நல்ல இடம் தேடிக் கொண்டிருப்பவர்கள், வீடு கட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு அரசாங்க அதிகாரிகள், ஆவணங்கள், மூலப் பத்திரத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டு உபயோகப் பொருள்களில் பழுதுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
தண்ணீரால் பாதிப்பு
சூரியன், சந்திரன், கேது இணையும் போது பொதுவாக தண்ணீரினால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 4 ஆம் இடம் என்பது சுக ஸ்தானம். நன்றாக இருக்கும் காளை மாடுகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். விவசாயிகளுக்கு பாதிப்புகள் வரும் காலகட்டம். அம்மாவுடைய உடல்நலனில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு கண் தொடர்பான பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
கழுத்தில் சுழுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முதுகுத் தண்டுவட வலி வேதனை போன்றவை அம்மாவுடைய வம்சத்தினருக்கு வரும். சக ஊழியர்களால் பலியாடு ஆக்கப்படும் சூழல் ஏற்படும். சூரிய கிரகரணத்தின் பாதிப்பானது ஒரு மண்டலத்துக்கு நடைபெறும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவது நல்லது. ஒரு மாத காலத்துக்கு பாதிப்புகள் இருக்கும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
வழிபாடு, தானம்
மிதுன ராசிக்காரர்கள் உங்கள் வீட்டின் இடதுபுறமுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் தான, தர்மம் செய்வது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். பச்சரிசி, வெல்லம், செம்பு பாத்திரம், 11 முதல் 101 ரூபாய் வரை தட்சணை, வெத்தலை, வஸ்திரம் வைத்து அருகில் உள்ள அர்ச்சகர்களுக்கு தானமாகக் கொடுப்பது உங்கள் வம்சத்தை தலைக்கச் செய்யும்.












Click it and Unblock the Notifications