Rasi Palan This Week: மிதுன ராசிக்கு கட்டம் சரியில்லை.. 7 நாட்கள் ரொம்ப கவனம்
Mithunam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அஷ்டமத்தில் நிறைய கிரகங்கள் உள்ளன. ராசியதிபதியும் அஷ்டமத்தில் சிக்கியுள்ளார். பரிகாரம் செய்வது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு. வாரம் முழுக்க முழுக்க தினந்தோறும் மதிய வேளைகளில் சாப்பிடுவதைத் தவிர்த்து விரதம் இருப்பது நல்லது. விரதம் இருக்க முடியாதவர்களுக்கு தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும்.
ஆவணங்களில் கவனம்
இந்த காலகட்டத்தில் எல்லோருடைய வீட்டிலும் உள்ள கடிகாரங்களை மிதுன ராசியினர் மாற்றிக் கொள்வது நல்லது. கடிகாரத்தில் பேட்டரி மாற்றுவது, வண்டி வாகனங்களில் பழுதுகளை நீக்குவது நல்லது. தேவையில்லாத ஆவணங்களைத் தூக்கி வீசிவிட்டு புதிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் ஆவணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
இழுபறியாக இருந்தவை..
பிள்ளைகள் விஷயத்தில், துணை, பெற்றோர் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். விலங்குகள், கால்நடைகள் தங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களை சுற்றி எல்லாமே உயிரோட்டமாக இருக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆபத்து
எஃசி செய்வது, ஆர்சியை புதுப்பிப்பது, பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். மிதுன ராசியினர் இந்த வாரம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம். அசிங்கம், அவமானம், விபத்து போன்றவை வரும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கரிவரதராஜப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 65 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications