Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் மிதுன ராசி.. நிறைய டிராவல் பண்ண போறீங்க!
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கு தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் திருமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். அவர்களுக்குப் பிடித்த எதிர்பார்த்த வண்டி, வாகனங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
பயணங்கள்
துணையுடன் தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் அதிகமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். வெயில், மழை, விமானம் இல்லை என எதையும் யோசிக்காமல் சென்று கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தினருடன் வெளியில் செல்வது, உடன்பிறப்புகளின் வீட்டுக்குச் செல்வது என மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பிரச்சனைகள் நீங்கும்
பதவி உயர்வில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்த இழுபறியான சிக்கல்கள், பாதிப்புகள் நீங்கும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய நல்ல காலகட்டம். பெரிய வெற்றிகள் ஏற்படும். அந்த வெற்றிகள் மூலமாக அடுத்த கட்டத்துக்குச் செல்லும் அமைப்பு ஏற்படும்.
கவனம்
நிறைய ஆஃபர்கள் வந்து சேரும். அட்மின் பொறுப்புகள், நிதி சார்ந்த பொறுப்புகள் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வேலையில் போர் வருவதற்கான வாய்ப்புள்ளது. வங்கித் துறை, குழந்தைகள் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் கம்யூனிகேஷன் மற்றும் எழுத்து துறையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முழு சந்திர பலன் கிடைக்கும். முயற்சி செய்யக்கூடிய அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும்.
வழிபாடு
உத்வேகமும், உற்சாகமும் பிறக்கும். உத்தியோகத்துக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம், மாற்றம் ஏற்படும். வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எந்தவிதமான மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. நிறைய நல்ல காரியங்கள் உங்கள் வீட்டில் நடக்கும். அலர்ஜி, தோல், ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மிதுன ராசியினருக்கு நவக்கிரகத்தில் இருக்கும் புதன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications