மிதுன ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 4 கிரகங்கள்.. இந்த விஷயங்களை மட்டும் பண்ணுங்க
Mithunam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கிரக நிலைகள்
புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆகிறார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.
இந்த வார ராசி பலன்
சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றியைக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். 8 ஆம் தேதி துலாம் ராசி, சுவாதி நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கிறார். 14 ஆம் தேதி தனுசு ராசிக்குப் போகிறார். அதனால் இந்த வாரம் முழுக்க துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். நேரடியாக சந்திரனுக்கு குரு பார்வை வருவதால் 13, 14 ஆம் தேதி நன்றாக இருக்கும் காலகட்டம்.
வெற்றி மேல் வெற்றி
பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன், ராகு இருப்பதால் கோயில் கும்பாபிஷேகங்களை எடுத்து செய்வீர்கள். வண்டி, வாகனங்கள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பல விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். சில காயங்கள், வெட்டுக் காயங்கள், நண்பர்களால் பிரச்சனை, அண்ணன் தம்பிக்கு இடையே பிரச்சனை வருவது, சிலரின் வீட்டில் தம்பிக்கு மனம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
விரயங்கள்
வேலையில் முக்கியமான மாற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு வேலைவாய்ப்புகள் வந்து சேரும். அமோகமான காலகட்டமாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு அனுகூலத்தைத் தரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பயணங்கள் சமயத்தில் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. விரயங்கள் அதிகமாக இருக்கும் காலகட்டம் என்பதால் வெள்ளிக்கிழமை மதிய வேளைகளில் உணவு தானம் கொடுப்பது நன்மையத் தரும்.
பசுக்களுக்கு தானம்
சனிக்கிழமைகளில் கோதுமை, வெல்லம் சேர்த்து பசுமாடுகளுக்கு தானமாகக் கொடுப்பது நல்லது. ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானை வழிபாடு செய்வது முன்னேற்றத்தைக் கொடுக்கும். மகான்கள் வழிபாடு உங்களுக்கு மேன்மையைத் தரும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications