Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. ஒரு விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mithunam rasi palan].
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் உள்ளோம். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த கிரக மாற்றங்களால் பிப்ரவரி இரண்டாம பாதியான 18 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசியினருக்கு புதிய அறிமுகத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். துணை விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். துணையின், பெற்றோர், பெரியோரின் நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றக் கூடிய யோகம் உண்டாகும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.
அனுகூலம்
பயணங்கள் சமயத்தில் ஏற்றம் ஏற்படும். தந்தை, தாயாரின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறக் கூடிய காலகட்டம். அலர்ஜி, ஒவ்வாமை, சளி தொந்தரவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நல்ல நல்ல விஷயங்கள் சுபகாரியங்கள், இடமாற்றங்கள் போன்றவை உண்டாகும். பிப்ரவரி மாதத்தில் நடக்கும் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும்.
அன்பு பெருகும்
கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். இருவராலும் இருவருக்கும் ஆதாயம் ஏற்படும். தம்பதிக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு மனதுக்குப் பிடித்தவர்களுடன், நண்பர்களுடன், குடும்ப உறுப்பினர்களிடம் உங்களுடைய இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண உறவில் இருந்து வந்த பழைய பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.
முன்னேற்றம்
வியாபாரம், தொழில், வணிகத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பாராத அளவிலான லாபம் கிடைக்கும். உங்களுடைய வியாபாரம், தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாகனத்தில் சாகசங்கள் செய்யாமல் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. பெரிய அதிர்ஷ்டம் ஏற்படும். தெய்வமார்க்க பயணமும் செய்வீர்கள்.
வழிபாடு
பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். மிதுன ராசிக்கு குடும்பத்தில் புதுவரவுகள் வருவதற்கான யோகம் உண்டு. இந்த காலகட்டத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். பெருமாள் வழிபாடு நம்பிக்கையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications