Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. எதிர்பார்த்த எல்லாமே நடக்கப் போகுது

Subscribe to Oneindia Tamil

Mithunam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Mithunam rasi palan

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)

மிதுன ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இதுவரை இருந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவித மாற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். அடுத்தடுத்து நல்லது நடக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

முன்னேற்றம்

பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் அமையும். உத்தியோகம், வியாபாரம், பெரிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும் காலகட்டம்.

அனுகூலம்

அடுத்தடுத்து அற்புதமான முடிவுகளை எடுப்பீர்கள். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம், சுபகாரியம் என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும்.

மகிழ்ச்சி

உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை ஏற்படும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். பதட்டத்தில் இருந்து மீண்டு வருவீர்கள் உங்களுக்குப் பிடித்தமான மனிதர்களைச் சந்திக்கும் யோகம் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்கள் பாராட்டும் வகையில் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாற்றம், முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நல்ல காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

உத்தியோகத்தில் நல்ல ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தடைபட்டு வந்த காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஜாயிண்டுகளில் வலி, முதுகு வலி, கை கால் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக உத்வேகம் உண்டாகும். நவக்கிரகத்தில் புதன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+