Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
Mithunam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இடமாற்றம், தொழில் மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நவக்கிரகத்தில் இருக்கும் புதன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
செல்வாக்கு கூடும்
ஜாயிண்ட்களில் ஏற்படும் வலிகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், வேலை, வியாபாரம், உத்தியோகம், படிப்பில் முன்னேற்றம் இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு படிப்படியாக எல்லா விஷயத்திலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
தொழிலில் ஏற்றம்
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல யோகமான காலகட்டமாக இருக்கும். துணைக்கும், உங்களுக்கும் இருந்து வந்த சகலவிதமான கஷ்டங்களும் பரிபூரணமாக நீங்கும். உறவுகளில் அனுகூலம் உண்டாகும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்து வந்த விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டே இருக்காமல் முன்னோக்கிச் செல்வது சகலவிதமான யோகத்தையும், அனுகூலத்தையும் பெற்றுத் தரும்.
சிக்கல் தீரும்
வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது.
வீடு வாங்கும் யோகம்
மனதில் அபராமான மகிழ்ச்சி ஏற்படும். தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். அரசியலில் பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். நிறைய பேருக்கு புதிய வீடு வாங்கும் உண்டாகும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். வெளியூரில் செட்டிலாகும் யோகம் ஏற்படும். எந்த விஷயங்கள் எல்லாம் தள்ளிப் போனதோ அந்த விஷயங்கள் எல்லாம் இப்போது நடக்கும் நல்ல காலகட்டம்.












Click it and Unblock the Notifications