Rasi Palan This Week: மிதுன ராசிக்கு 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது

Subscribe to Oneindia Tamil

Mithunam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Mithunam rasi palan]

mithunam-rasi-palan-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-from-march-9-to-15

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)

மிதுன ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். உங்களை நிலைப்படுத்தும் அமைப்பு உள்ளது. இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.

தொழில்

வியாபாரத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். பங்குனி மாதம் என்று தொழில் தொடங்குவதை தள்ளிப்போட தேவையில்லை. பிள்ளைகள், குடும்பம், தொழில், தாய்வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை உண்டாகும். இந்த வாரத்தின் இரண்டாம் பகுதியில் இருந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

வெற்றி

எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தானம் தர்ம காரியங்களை செய்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எல்லா விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும். தைரியம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

பிரச்சனைகள் நீங்கும்

வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பொறுப்புகள் அதிகரிக்கும். நம்பிக்கை ஏற்படும். தான தர்மங்கள் செய்யக்கூடிய காலகட்டம். பூர்வீகத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். முடிவு செய்யக்கூடிய அனைத்து விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். எதற்காகவும், யாருக்காகவும் தள்ளிப் போகாது. வரும் 12 ஆம் தேதியில் இருந்து உங்களுக்கு எல்லா விஷயங்களும் நல்லதாக நடக்கும்.

வழிபாடு

வரன் அமைவது, திருமண யோகம், வெளியூர் செல்வது போன்ற அமைப்பு உள்ளது. மார்ச் 16 ஆம் தேதிக்குப் பிறகு பல பிரச்சனைகள் குறையும். பொறுமையாக இருந்தால் நிறைய விஷயங்கள் பாசிட்டிவாக நடக்கும். நவக்கிரகத்தில் இருக்கும் புதன் வழிபாடு விசேஷமான பலன்களைத் தரும். ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+