Mithunam: மிதுன ராசி பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்
ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று ஆடிகிருத்திகை முருகனுக்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருப்பது திருமணப் பிரச்சனைகள், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், மிதுன ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி பெண்கள் அறிவின் உச்சத்தில் இருப்பவர்கள். எல்லா விஷயங்களிலும் நீண்ட காலத்திற்காக யோசித்து செய்பவர்கள். ஆழ்ந்த அறிவு, சமயோஜித புத்தி கொண்டவர்கள். உங்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் 4 ஆம் இடம் மட்டும் வலுவிழந்து காணப்படுகிறது. பொருளாதாரத்தில் பெரிய அளவு முன்னேற்றம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
குடும்பம்
தொழில் தொடங்குவதற்கான பாக்கியம் ஏற்படும். மீடியா, பிஆர் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம், தொழிலில் வெற்றி கிடைக்கும். தடைகள் இருந்தவர்கள் கூட அதைத் தாண்டி தொழிலில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். தம்பதிக்குள் இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
இடமாற்றம்
குழந்தைகள் விஷயங்களில் மேன்மை ஏற்படும். உங்களுடைய சொல் பேச்சை கேட்க ஆரம்பிப்பார்கள். வயதிற்கு தகுந்தாற்போல் பிள்ளைகளால் நிம்மதி ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். வெளிமாநிலத்திற்குச் செல்லும் யோகம் ஏற்படும். நீங்கள் விரும்பும் இடமாற்றம் உண்டாகும். கணவன்மார்களுக்கு இடமாற்றம் கிடைத்து வெளிமாநிலம் செல்வதற்கான யோகமும் உண்டு. அப்ராட் செல்ல விரும்புவோர் இந்த ஒரு மாதம் சிறிது இழுபறியாக இருக்கும்.
வரன்கள் கைகூடும்
செப்டம்பர் மாத காலகட்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளிநாடு செல்வதற்கான தேர்வுகள் எழுதுவோர் இந்த மாதம் கிளியர் செய்வதற்கான யோகம் உண்டாகும். திருமண வரன்கள் கைகூடும். 5 ஆம் அதிபதி நீசமாகி இருப்பதால் சொந்தத்துக்குள் மாப்பிள்ளை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. சொந்தத்தில் தான் மாப்பிள்ளை என்றால் ஜாதகப் பொருத்தத்தை பார்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
ஏற்கனவே ரிலேசன்ஷிப்பில் இருப்பவர்கள் அதற்கான பேச்சை அடுத்த மாதம் ஆரம்பிப்பது நல்லது. குடும்பம் பார்த்து திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் சாதகமாக முடியும். சனிக்கிழமை தோறும்.சக்கரத்தாழ்வார் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சக்கரத்தாழ்வார் ஸ்தோத்திரம் கேட்படு, படிப்பது சகல வித முன்னேற்றங்களையும் தரும்.
அசைவம் வேண்டாம்
மிதுன ராசி பெண்கள் பச்சைப் பயிறு, பச்சைக் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. அசைவம் சாப்பிடுவதையும், குறிப்பாக இரவு நேரத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. திருநங்களைகளுக்கு உதவுவது ஏற்றத்தைத் தரும். பச்சை நிற ஆடைகளை உடுத்துவது நல்லது. மஞ்சள் நிற ஆடைகளைத் தவிர்ப்பது நன்மையைத் தரும்.


Click it and Unblock the Notifications
