Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு சொத்துகளை குவிக்கும் யோகம்.. இனி உங்க காட்டுல பணமழை தான்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசியினருக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய 4 கிரகங்களும் தங்கள் நிலையை அடுத்தடுத்து மாற்றுகின்றன.

செப்டம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 14-ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரனுன் பெயர்ச்சியாகி புதனுடன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் லட்சுமி நாராயண யோகத்தை உண்டாக்குகின்றன. செப்டம்பர் 15 ஆம் தேதி கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்களும் நிகழ்கின்றனர். செப்டம்பர் மாதம் நிகழும் இந்த கிரக மாற்றங்களால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசி பிள்ளைகளுடைய படிப்பு, தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் நல்ல ஏற்றங்கள் ஏற்படும். அபரிமிதமான தைரியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். துணையிடம் இருந்து வந்த மன பாரங்கள், கஷ்டங்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த அந்நியோன்ய குறைபாடுகள் நீங்கும்.
செல்வாக்கு கூடும்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். இந்த காலகட்டத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். கோர்ட், வழக்கு, சொத்து பிரச்சனை தொடர்பான வழக்குகளில் நீங்கள் முயற்சித்தால் சுமூகமாக அல்லது செட்டில்மென்டாகும் அற்புதமான காலகட்டம். பண வரவு நன்றாக இருக்கும்.
சொத்துகள் கிடைக்கும்
சொத்துகளைப் பிரித்துக் கொள்வது, பாகப் பிரிவு பிரச்சனை, சொத்துகளால் அண்ணன், தம்பி தகராறுகள் அனைத்தும் இந்த செப்டம்பர் மாதத்தில் நிவர்த்தியாகும். 9 ஆம் இடத்தை சுபர்கள் வலுத்து பார்ப்பதால் இதுவரைக்கும் கிடைக்காத பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும். பணத் தட்டுப்பாடுகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
மாற்றம், முன்னேற்றம்
இடமாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என நல்ல மாற்றங்கள் வந்து சேரும். குரு கேந்திராதிபதி தோஷத்தில் இருப்பதால் வரும் மாற்றங்களை வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றுக் கொள்வது நல்லது. கிரகத்துக்கு ஏற்ப மாறிக் கொள்ள வேண்டும். புதிய முயற்சிகள் அனுகூலத்தை தரும். குடும்பத்தில் புதிய வரவுகளால் சந்தோஷம் ஏற்படும்.
கவலைகள் தீரும்
குழந்தைகளைப் பற்றிய கவலைகள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடத்தின் இறுதியில் நிச்சயமாக திருமண யோகம் உண்டு. ராசியில் குரு இருந்து 5, 7, 9 ஆம் இடத்தைப் பார்ப்பது மிகப்பெரிய மேன்மையை ஏற்படுத்தும். கடந்த மூன்று ஆண்டுகாலமாக அஷ்டம சனி காலத்தில் கடும் பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள்.
வழிபாடு
ஏற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஏற்றத்தைக் காண்பீர்கள். மனதில் இருந்து வந்த பாரங்கள், குழப்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் காலகட்டம். ராகவேந்திரர் வழிபாடு, நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு பெரிய அளவில் அனுகூலத்தை தரும்.












Click it and Unblock the Notifications