Rasi Palan This Week: மிதுன ராசிக்கு கனவுகள் எல்லாம் பலிக்கப் போகுது.. மிஸ் பண்ணிடாதீங்க
வார ராசி பலன்: ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். குரு வழிபாடு சகல விதத்தில் நன்மையை ஏற்படுத்தும். உங்களுடைய இஷ்ட தெய்வம், மகான்கள், நீங்கள் பின்பற்றும் குருக்களை வழிபாடு செய்வது நல்லது நடக்கும் நேரம். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும்.
கனவுகள் நிறைவேறும்
பிள்ளைகள் மற்றும் துணையின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றக்கூடிய காலகட்டமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். படபடப்புகள், முதுகு, அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
நன்மைகள் பலவும் நடக்கும் நேரமாக இருக்கும். பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மகான்கள் தரிசனம் செய்வீர்கள். பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மகான்கள் தரிசனம் செய்வீர்கள். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். மலைக் கோயில்கள், காசி, கேதர்நாத் போன்றவற்றிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் வரும்.
பதவி உயர்வு
கடல் கடந்து பிரசித்திபெற்ற கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். மலேசியாவில் இருக்கும் முருகனை காண சென்று வரும் வாய்ப்பு வரும். முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். அரசுத் துறையைச் சார்ந்தவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பெரிய ஏற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுகூலங்கள் நிச்சயம் ஏற்படும்.
பணவரவு
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அற்புதமான ஏற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கையில் வரும் எந்தவிதமான நல்ல மாற்றங்களையும் பயன்படுத்திக் கொள்வது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள்
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications