Rasi Palan This Week: மிதுன ராசிக்கு இனி வாழ்க்கையே மாறப்போகுது.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mithunam-weekly-rasi-palan-what-kind-of-benefits-gemini-mithunam-people-will-get-from-septemer-1

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் உங்களுக்கு அற்புதத்தை ஏற்படுத்தும். அடுத்தடுத்து நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் காலகட்டம். தைரியமும், நம்பிக்கையும் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது.

புதிய பொறுப்பு, கெளரவம்

எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய பொறுப்பு, புதிய கெளரவம், அரசு கெளரவம் ஏற்றத்தையும், நம்பிக்கையையும் தரும். உத்தியோகத்தில் நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் நல்ல நேரம். யோக பலன்கள் உங்களுக்கு அதிகளவில் கிடைக்கும்.

மகிழ்ச்சி பெருகும்

பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தேவையில்லாத பாதிப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் விஷயங்களில் ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக்கூடிய காலகட்டம். துணை, பெற்றோரிடம் இருந்து வந்த இணக்கமற்ற உறவுகள் அனைத்தும் மாறும். இனி குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையான காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

ராகவேந்திரர் வழிபாடு எடுத்த காரியங்களில் வெற்றியை ஏற்படுத்தும். ரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடுகளை அதீத கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. ஏற்றத்திற்கான இந்த நல்ல காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். எந்த பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. வேண்டாம் என்று சொன்னால் பின்னால் வருத்தப்படும் சூழல் ஏற்படும்.

பண வரவு

வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். பண வரவுகள் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எந்தவொரு காரியத்தை செய்தாலும் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செய்வது அற்புதமான ஏற்றத்தை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+