Rasi Palan This Week: மிதுன ராசி வாயில் கண்டம்.. வீண் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது
வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம், இடமாற்றம் போன்ற அனைத்து மாற்றங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உறவினர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். ரத்தபந்த உறவுகளிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் செய்வது கூட பெரிய பதட்டங்களையும், சங்கடங்களையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.
தர்க்கம் தவிர்
முதலாளிகள், மேலதிகாரிகளிடத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. அவர்களிடம் தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பெரிய ஏற்றங்கள் பெறும் யோகம் உண்டு. பிள்ளைகளிடத்தில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி அனுகூலம் ஏற்படும். படிப்பு, தொழில் விவகாரத்தில் அனுகூலம் காணப்படும். சுபகாரியங்கள் அனைத்தும் நடக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
பிரச்சனைகள் நீங்கும்
குடும்பத்தில் துணையின் விஷயத்தில் இருந்த மனத் தாங்கல்கள் நீங்கும். ஏற்கனவே பிரச்சனைகள் நடந்து கோர்ட், வழக்கு என்று சென்று கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு அந்த அமைப்புகள் மாறி நன்மைகள் நடக்கும். அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய் வழி, தந்தை வழி உறவுகள் மேன்மை அடையும் அனுகூலம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
அனுகூலம்
வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். மேலதிகாரிகள் விஷயத்தில் தர்க்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உறவு முறையில் அதீத கவனமாக இருக்க வேண்டும். தொலைதூரத்தில் உத்தியோகம், வியாபாரம் காரணமாக தள்ளி இருப்பவர்கள் பெரியவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது சந்தோஷத்தையும், நன்மையையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
கடன்கள் நீங்கும்
பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தனிப்பட்ட முறையில் அனுகூலங்கள் காணப்படும். பழைய கடன்களைத் தீர்த்து முடிக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இடமாற்றங்கள் வந்தால் எடுத்துக் கொள்ளலாம் ஏற்றத்தை உண்டாக்கும். கொழுப்பு, ரத்த அழுத்தம், லிவர் ஃபங்சன், கிட்னி செயல்பாடுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
மிதுன ராசியினர் வியாழக்கிழமைகளில் தேவி வழிபாடு, அம்பாள் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். நவராத்திரியில் சிறப்பான அமைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வாரம் அற்புதமான வாரமாகவும், நன்மைகள் கொடுக்கும் வாரமாகவும் அமையும்.












Click it and Unblock the Notifications