திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ1.02 கோடி நன்கொடை.. முஸ்லீம் தம்பதியினரின் மத நல்லிணக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழுமலையானுக்கு ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். கோடி கோடியாக பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினர், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு கோடியே 2 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏழுமலையான் மீதான பக்தியில் பணத்தை நன்கொடை அளித்த அந்த தம்பதியினரின் பெயர்
சுபினா பானு மற்றும் அப்துல்கனி என்பதாகும். சென்னையைச் சேர்ந்த இவர்கள் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்ட பிறகு, அங்குள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்தனர்.

Muslim couple Donates of Rs 1.02 Crore to Tirupati Balaji temple

அப்போது ரூ 1.02 கோடி ரூபாய்கான வரைவோலையை நன்கொடையாக வழங்கினர். 15 லட்ச ரூபாயை தினசரி அன்னதான திட்டத்திற்கும், 87 லட்ச ரூபாயை பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிக்கும் பயன்படுத்த அவர்கள் நிர்வாக அதிகாரியை கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள், அங்க பிரதட்சணம் செய்வதற்குரிய டோக்கன்கள், ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 300 ரூபாய் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் மாதத்திற்குரிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 21ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி வரை புக் செய்யலாம். மின்னணு குலுக்கல் முறையின் மூலம் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

அங்கப்பிரதட்சனம் செய்யும் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணி வரை புக் செய்யலாம். திருமலை திருப்பதியில் நவம்பர் மாதம் விடுதிகளில் தங்குவதற்கான புக்கிங் வரும் 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+