365 நாட்களுக்குப் பின்..நீசபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்?.. மேஷம் முதல் கன்னி வரை
Lucky zodiac signs: மீன ராசிக்குள் செல்லும் புதன் பகவானால் நீசபஙக ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் மேஷம் முதல் கன்னி வரை அதிர்ஷ்ட பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கிரகங்கள், நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவருடைய ராசிபலன் கணிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் இடமாற்றங்கள் நடைபெறவுள்ளன. புதன் பகவானும் தற்போதுள்ள இடத்தில் இருந்து பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் நுழைகிறார். பின்னர், அங்கிருந்து பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்குச் செல்லவுள்ளார். புதன் நீச்சமடையும் ராசியாக மீன ராசி உள்ளது.

மீன ராசிக்குள் செல்லும் புதன் பகவானால் நீசபங்க ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகத்தால் அனைத்து ராசிகளும் அதன் தாக்கத்தை அனுபவிக்கும். இந்த யோகம் 365 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும். இந்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த வகையில், நீசபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் அள்ளும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி - இந்த ராஜயோகத்தால் உறவு முறைகளில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவி கிடைக்கும். எடுத்த காரியங்களில் சிறு சிறு தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களிடம் இருந்து ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
ரிஷப ராசி - ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து காரியங்களிலும் சிறப்பான பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. இழுபறியாக நீண்ட நாட்களாக வராத பணங்கள் உங்களை வந்து சேரும். தாயின் வழியாக உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு மகிழ்ச்சியைத் தரும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மிதுனம் ராசி - மிதுன ராசிக்காரர்களுக்கு ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதன் மூலம் முன்னேற்றத்தையும் காண்பீர்கள். நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிற மனிதர்களால் தொல்லைகள், பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் சீக்கிரமே உங்களை விட்டு விலகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் சார்ந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடக ராசி - கடக ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளது. ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் உங்களை வந்து சேரும். வயிறு சார்ந்த பிரச்சனையில் இருந்தவர்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்கும். உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி - சிம்ம ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிக்க தாமதம் ஏற்படும். உடல் நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாயுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் சில கூடுதல் செலவுகள் ஏற்படும். பணத்தை சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் சில சவால்கள், இடையூறுகள் ஏற்படும். நரசிம்மர் வழிபாடு நல்ல பலன்களை அள்ளித் தரும்.
கன்னி ராசி - கன்னி ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் வேலை வாய்ப்பு பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். கணவன், மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கணவன், மனைவியால் மகிழ்ச்சி ஏற்படும்
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications