புத்தாண்டு 2025: வீடு, கார் வாங்கும் யோகம் பெறும் 6 ராசிகள் எது தெரியுமா?.. உங்க ராசி இருக்கானு பாருங்க
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டில் பலருக்கும் பல கனவுகள் இருக்கும். வீடு, நிலம், கார், உயர் கல்வி, உயர் பதவி என்று நீண்ட கால ஏக்கங்களுடன் 2025 ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த யோகங்கள் எந்தெந்த ராசிகளுக்கு உள்ளன என்பதை விரிவாக காணலாம்... (Which rasi get own house, car)
சொந்த வீடு கனவு கிட்டத்தட்ட எல்லோருக்குமே இருக்கும். பலருக்கு சொந்த வீடு வாழ்நாள் கனவாக இருக்கும். 2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை சனி, குரு, ராகு – கேது ஆகிய மூன்று முக்கிய பெயர்ச்சியும் ஒரே ஆண்டில் குறுகிய காலத்தில் நடக்கவுள்ளன. இது எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி யோகத்தை கொடுக்கும். (வீடு வாங்கும் யோகம் உள்ள ராசிகள்)

மிதுனம் (Puthandu rasi palan for Midhunam): மிதுனம் ராசிக்கு பத்தாவது இடத்தில் சனி பகவான் உள்ளார். அங்கிருந்து அவர் நான்காம் இடத்தை பார்க்கிறார். சனி பகவான் நான்காம் இடத்தைப் பார்க்கும்போது வீடு, நிலம், வாகனங்கள் தானாக வந்து சேரும். மாற்றங்கள், ஏற்றங்கள் நிச்சயம் கிடைக்கும். புதனை சனி பார்ப்பதால் அது சார்ந்த வழிபாடுகளில் ஈடுபடுவது யோகத்தை எளிதாக கொடுக்கும். சனீஸ்வரர், ஆஞ்சநேயர் வழிபாடு வீடு வாய்ப்பை எளிதாக்கும்.
கடகம் (Puthandu rasi palan for Kadagam): கடகம் ராசிக்கு அஷ்டம சனி நீங்கிவிட்டது. நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருப்பீர்கள். கடகத்துக்கு குரு பார்வை வந்துள்ளதால், 2025 ஆம் ஆண்டில் நீங்கள் எதிர்பார்த்த படியே அருமையான வீடு வாய்ப்பு அமையும்.
குரு நான்காம் இடத்தை பார்க்கிறார். குருவால் நீங்கள் எதிர்பார்த்த விலையிலேயே நல்ல விசாலமான பங்களா மாதிரியான அமைப்பில் வீடு அமையும். நல்ல பிரம்மாண்ட கார் வாங்குவதற்கான யோகம் உள்ளது. நிலம் வாங்குவதற்கும் யோகம் உள்ளது. குரு மற்றும் ராகவேந்திரர் வழிபாடுகளில் ஈடுபடுவது காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும்.
கன்னி (Puthandu rasi palan for Kanni): கன்னி ராசிக்கு குரு பகவான் ஏழாம் பார்வையாக நான்காம் இடத்தைப் பார்க்கிறார். சனி பகவானும் பத்தாம் பார்வையாக நான்காம் இடத்தை பார்க்கிறார். இந்த இரண்டும் சாதகமான அமைப்பில் இருப்பதால் யோகம் உண்டாகும். குரு, சனி அருளால் நீங்கள் நினைத்த பெரிய வீடு கிடைக்கப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
விருச்சிகம் (Puthandu rasi palan for Viruchigam): விருச்சிகம் ராசிக்கு நான்காம் வீட்டை குரு பார்க்கிறார். குரு நான்காம் வீட்டை பார்ப்பதுடன் ஏற்கனவே ராகு அமைப்பும் சாதகமாக உள்ளது. இதன் காரணமாக நல்ல விலாசமான அமைப்புடன் கூடிய பெரிய வீடாகவே அமைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
தனுசு (Puthandu rasi palan for Dhanusu): தனுசு ராசிக்கு சனி பகவான் நான்காம் இடத்துக்கு வருகிறார். உங்கள் ஆசைப்படியே ஊரிலேயே நன்றாக தனித்து தெரியுமளவுக்கான மனதுக்கு நிறைவான வீட்டை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.
மீனம் (Puthandu rasi palan for Meenam): மீனம் ராசிக்கு குரு பகவான் நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அதனால் நீங்கள் நினைத்தபடியே நல்ல பெரிய வீடாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேற்சொன்ன ராசிகளுக்கு 2025 ஆம் ஆண்டில் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேநேரத்தில் தங்களுக்கு சாதகமான இறைவழிபாடு, ராசியான கிழமை, எண் ஆகியவற்றை ஆராய்ந்து எடுக்கும் முடிவுகள் காரியத்தை எந்த தொய்வும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவேற்ற உதவும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications