Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு 2025: 4 சுபயோகங்களால் பண மழையில் நனையப் போகும் 5 ராசிகள் எவை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு பலன் 2025: வரும் புத்தாண்டில் கிரகங்களின் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படவுள்ளதால் ஆரம்பத்திலேயே நான்கு சுப யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த கிரக மாற்றங்களினால் சில ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப் போகிறது. அதிர்ஷ்டம் பெறும் அந்த 5 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்... (Lucky zodiac signs 2025 new year)

புத்தாண்டு பல புதுமைகளுடன் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. புதிய ஆண்டை நம்பிக்கையுடனும், கனவுகளுடன் தொடங்கும் உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் தொடங்கத்தில் கிரகங்களின் இயக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த கிரக மாற்றங்களினால் ஆண்டின் ஆரம்பத்திலேயே நான்கு சுப யோகங்கள் உருவாகுகின்றன. ஜனவரி 1 முதலே பல்வேறு நல்ல பலன்களைத் தரப் போகிறது.

2025 newyear rasi palan astrology 2025

Image: Ai created

2025 ஜனவரி 1 ஆம் தேதி இந்து நாட்காட்டியின்படி ஹர்ஷனா, பலவ, கௌலவ் மற்றும் திதில யோகங்கள் எனும் நான்கு யோகங்கள் உருவாகின்றன. 2025 ஆம் ஆண்டின் சிறப்பாக இந்த நான்கு யோகங்களும் கூடி வருகிறது. இந்த நான்கு யோகங்களும் அரிதாக நிகழக் கூடியதாகவும். அதே நேரத்தில் பல்வேறு நற்பலன்களையும், சுபச் செய்திகளையும் தரும்.

ஹர்ஷ யோகத்தின் பலன்: ஹர்ச யோகம் உண்டாகும்போது குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல்வேறு அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நீண்ட நாள் பகைவர்கள், எதிரிகளை அழித்து வெற்றி காண்பீர்கள். வலிமை பெற்ற நண்பருடன் நட்பு பாராட்டுவீர்கள். உங்களுடைய மனதிற்கு நெருக்கமானவர்களுடன் உங்களுடைய பொன்னான நேரத்தை செலவிடுவீர்கள் என்கிறது ஜோதிடம்.

பலவ யோகத்தின் பலன்: பலவ யோகம் பல்வேறு செயல்களில் நன்மைத் தரக்கூடிய யோகமாகும். இந்த பலவ யோகம் அக்னி வழிபாடு, வேதம், இதிகாசங்கள், புராணங்கள், அமைதி சடங்குகளை வாசிப்பதை ஊக்குவிக்கும்.

கெளலவ யோகத்தின் பலன்: கௌலவ யோகம் உறவுகளிடையே நெருக்கத்தை உண்டாக்கும். குழு பணியை மேம்படுத்தும். உயர்ந்த நிலைக்குச் செல்ல உதவும். சமூகய மயமாக்கலுக்கு உதவும்.

திதிலா யோகத்தின் பலன்: திதிலா என்பது தகவல் தொடர்புடன் தொடர்புடையது என்கிறது வேத ஜோதிடம். இந்த திதிலா யோகம் பல்வேறு அதிர்ஷ்டங்களைத் தரக் கூடியதாகும்.

ஹர்ஷ, பலவ, கெளலவ, திதிலா யோகங்களால் இந்தப் புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள், யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: நான்கு யோகங்களும் புத்தாண்டின் தொடக்கத்திலேயே உங்களுக்கு வருவதால் அதிர்ஷ்டங்கள் கொட்டும். எதிர்காலத்துக்கு தேவையான முக்கிய திட்டங்களை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். கல்வி துறை சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவர்களுக்கு இது சூப்பரான காலகட்டமாகும். புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உள்ளது.

மிதுனம்: மிதுன ராசிக்கு 2025 புத்தாண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும். கவலைகள் உங்களைவிட்டு விலகிச் செல்லும். பொருளாதார சூழல் மேம்படும். பண வரவு உண்டாகும். நிதிநிலை பிரச்னைகள் தீரும். சுற்றுலாவுக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழல் மற்றும் நல்ல உறவு ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். வியாபாரம், தொழிலில் லாபம் காண்பீர்கள்.

சிம்மம்: சிம்ப ராசிக்கு சுப யோகங்களால் அதிர்ஷ்டம் தரும் ஆண்டாக இருக்கும். சொத்து, வியாபாரம் போன்றவற்றால் நினைத்ததை விட எதிர்பாராத அளவுக்கு லாபம் காண்பீர்கள். தொட்டது துலங்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். நினைத்த விஷயங்கள் நிறைவேறும். கணவனால் மனைவியும், மனைவியால் கணவனும் சிறந்த ஆதயத்தை அடைவீர்கள். அன்றாட வேலைகளில் நற்பலன்கள் உண்டாகும்.

குடும்பத்துக்குள் நிலவி வந்த பிரச்னைகள் தீரும். மரியாதை, மதிப்பு உண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பண வரவு உண்டாகும். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு நான்று சுப யோகங்களின் பலனாக நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். சமுதயாத்தில் மரியாதை, மதிப்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்துக்குள் நிலவி வந்த பிரச்னைகள் பறந்து போகும். பண வரவு மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்டங்களைத் தரும் ஆண்டாக இருக்கும். நினைத்த நல்ல செய்திகள் விரைவில் வந்து சேரும்.

கும்பம்: ஆண்டின் தொடக்கத்திலேயே அமோகமான சுப பலன்களைப் பெறுவீர்கள். புதிய திட்டங்களைத் தொடங்கி, கடின உழைப்பை போட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். வேலை, தொழிலில் நல்ல நேரம் உண்டாகும். பழைய நெருங்கிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+