புத்தாண்டு 2025: சொந்த வீடு, நிலம் வாங்கப் போகும் 5 ராசிக்காரர்கள்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது
புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டு பிறக்க சரியாக 15 நாட்களே உள்ளன. வரும் புத்தாண்டில் வீடு, மனை வாங்கும் யோகம், வீடு கட்டும் யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உள்ளது. எந்தெந்த ராசிக்காரர்கள் வாங்கக் கூடாது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Which zodiac signs get house, land)
பொதுவாக ஒரு ஜாதகத்தில் வீட்டைக் குறிக்கக் கூடிய கிரகம் சந்திரன். மண், மனை, வீடு, வாகன சுகங்கள் நான்காம் இடத்தை வைத்து தான் கணிக்கப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் சந்திரனை வைத்தே வீடு கட்டும் யோகத்தை தெரிந்து கொள்ளலாம். நிலத்தைக் குறிக்க கூடிய கிரகம் புதன். ஜாதகத்தில் புதனும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் வீடு, நில யோகங்களைப் பெறலாம்.

Image: Ai created
ஒரு ஜாதகத்தில் புதன் வக்கிரமாகவோ, பரிவர்த்தணையாகவோ, விளிம்பாகவோ இருந்தாலோ உங்களுடைய பெயரில் வாங்கக்கூடிய நிலம் எதாவதொரு பிரச்னையால் விற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். அதனால், புதன் இந்த நிலையில் இருப்பவர்கள் அவர்கள் பெயரில் வீடு, நிலம் வாங்காமல் இருப்பது நல்லது. வீட்டில் மனைவி உள்ளிட்டோரின் ஜாகத்தில் புதனின் நிலை நன்றாக இருந்தால் அவர்கள் பெயர்களில் வீடு, நிலங்களை வாங்கலாம். அல்லது உங்களுடைய பெயருடன் மனைவி பெயரையும் சேர்த்து சொத்துகளை வாங்கலாம்.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் உங்களுடைய குடும்பத்தில் ஒரே ஒருவர் இருந்தால் போதும் வீடு, நிலங்களை நீங்கள் தைரியமாக வாங்கலாம். இந்த ராசியில் இல்லாதவர்கள் வீட்டை கட்டவோ, வாங்கவோ என எந்த காரியங்களை செய்தாலும் விரைவில் அந்த வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடும்பத்தில் யாருமே இந்த ராசிகளில் இல்லையென்றால் உங்களுடைய பாட்டி, தாத்தா யாராவது இந்த ராசியில் இருந்தால் கூட அவர்களை வீட்டில் வைத்துக் கொண்டு நீங்கள் வீட்டைக் கட்டலாம்.
புதன், சந்திரன் சரியாக இல்லாத ஜாதகக்காரர்கள் வீட்டை கட்டினாலும், அதனை வாடகைக்கு விடுவது நல்லது. ஜாதகத்தில் சந்திரன் ஒற்றைப் படை ராசியில் இருந்தால் வீடு கட்ட முடியும். இரட்டைப் படை ராசியில் இருந்தால் வீட்டைக் கட்டினாலும் அதில் நீங்கள் சென்று வாழ முடியாது.
சந்திரன் கோச்சார சனி அல்லது கோச்சார குருவினால் தூண்டப்படும்போது தான் வீடு கட்டக் கூடிய யோகம் வரும். 2025 புத்தாண்டின் முதல் பாதியில் கும்பம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மேஷ ராசிக்காரர்கள் யாராவது ஒருவர் உங்கள் வீடுகளில் இருந்தால் வீடு வாங்கும் யோகம் உண்டு. இந்த ராசிக்கார்கள் வீட்டில் உள்ளனர். ஆனால், இன்னொருவர் வேறு ராசியாக இருக்கிறார் என்றால் நீங்கள் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வீடு அமைக்கக் கூடிய யோகங்கள் வரும்.
அந்த வகையில், இரட்டைப் படை ராசியில் சந்திரன் இருந்தால் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து வீடு கட்டும் யோகம், நிலம் வாங்கும் யோகம் உண்டு. அதேபோல, வீடு, நிலத்தை வாங்க பணம் முக்கியத் தேவையாக உள்ளது. அந்தப் பணத்தைக் கொடுக்க கூடியவர் சுக்கிரன். ஒரு ஜாதகத்தில் ஏதாவதொரு வகையில் சனியுடன் 1, 5, 7 9 இல் சுக்கிரன் இருந்தால் அந்த ஆசைகளை அனுபவிக்கக் கூடிய யோகம் வரும்.
அதற்கடுத்து குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு சனிக்கு 1, 6, 7 இல் சுக்கிரன் வர வேண்டும். ஏதாவதொரு ஒற்றைப் படை ராசியில் குடும்பத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும்போது கோச்சார கிரகங்களின் தூண்டுதலால் வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications