Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசி பலன் 2023: சனியும் குருவும் செய்யப்போகும் அதிசய மாற்றம்..2 ராசிக்காரர்களும் லக்கி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பார்க்க கோடி நன்மை..2023ஆம் ஆண்டு குரு பார்வை கிடைக்கும் ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. 2023ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் மீன ராசியில் சில மாதங்களும், மேஷ ராசியில் 8 மாதங்களும் பயணம் செய்வார். மிக முக்கியமான இந்த இரண்டு கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவான் மே மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்கிறார். மே மாதத்திற்குப் பிறகு மேஷ ராசிக்கு வந்து அமர்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன சங்கடங்களையும் தரலாம். அதை தவிர்க்க ஆலய தரிசனம் செய்வது பாதிப்புகளை குறைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே..உங்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். நல்ல பண வருமானம் வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை மே மாதம் வரை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மதிப்பு மரியாதை உயரும். நல்ல பதவி கிடைக்கும். திருமண பாக்கியம் கைகூடும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். வீடு கட்ட கடன் கிடைக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

 அர்த்தாஷ்டம சனி

அர்த்தாஷ்டம சனி

இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். உற்சாகம் அதிகரிக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு உண்டாகும். நினைத்த கல்லூரிகளில் உயர்கல்வி படிக்க யோகம் வரும். படிப்பில் கவனமும் அக்கறையும் தேவை. அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்களுடைய ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. கால் வலி உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து போகும். வயிறு பிரச்சினைகள் வந்து போகும். வேலையில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்களுக்கு இருந்த மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது. எத்தனையோ அவமானங்கள் பட்டிருப்பீர்கள். இனி உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. காரணம் ஏழரை சனி முடியப்போகிறது. உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். காரணம் சனிபகவான் குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். மிகப்பெரிய வெற்றிகளைத் தரப்போகிறார். மதிப்பும் அந்தஸ்த்தும் கூடி வரப்போகிறது. விடிவு காலம் வரப்போகிறது. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

குரு பகவான் விரைய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். வெளிநாடு யோகம் வரப்போகிறது. படிப்பில் இருந்த மந்த நிலை மாறும் படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள். நல்ல முறையில் கல்வி பயில்வீர்கள். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும்.

 குரு பார்வையால் நன்மை

குரு பார்வையால் நன்மை

குரு பகவான் மே மாதத்திற்கு பிறகு 5ஆம் வீட்டிற்கு சென்று உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இதன் மூலம் உங்களுக்கு பொன்னான காலம் வரப்போகிறது. வெற்றிகள் தேடி வரப்போகிறது. உங்களை விட்டு விலகிப்போனவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வருவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குரு பலன் வந்திருப்பதால் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. மொத்தத்தில் 2023ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும் ஆண்டாக அமையப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+