ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2023: அதிர்ஷ்டமும் கோடீஸ்வர யோகமும் யாருக்கு தேடி வரும் தெரியுமா?
சென்னை: 2023ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள், யாருக்கு யோகங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் யாருடைய வீட்டில் அதிர்ஷ்ட தேவதை குடியேறப்போகிறார் என்று பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கப்போகிறது. கேதுவின் நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. குரு மீன ராசியில் ஆட்சி பெற்றிருக்க, சனி பகவான் மகர ராசியில் சுக்கிரன் உடன் சேர்ந்திருக்க,தனுசு ராசியில் புதன் வக்ர நிலையில் சூரியனுடன் இணைந்திருக்கிறார். மேஷ ராசியில் ராகு சந்திரன், ரிஷப ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

2023ஆம் ஆண்டில் நிறைய பேர் வேலையை இழந்திருப்பார்கள். இந்த ஆண்டு நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும். நீர் நிலைகள் நிறைந்து விவசாயம் செழிக்கும். மாணவர்களின் படைப்புத்திறன் அதிகரிக்கும். இது பொது பலன்தான் இந்த புத்தாண்டில் அவரவர் தசாபுத்தி படி ராசிபலன்களில் சில மாறுதல்கள் வரலாம்.
மேஷம் ராசிக்காரர்களே உங்கள் ராசியில் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறக்கும் போது உங்க ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் பத்தாம் வீடு அதிபதி சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்க கூடவே சுக்கிரன் இணைந்திருக்கிறார். இந்த ஆண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கிறது. ஏப்ரல் மாதம் வரை குரு 12 வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதுவரைக்கும் சுப விரைய செலவுகள் ஏற்படும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். மே மாதம் குரு பகவான் உங்கள் ராசிக்கு வந்து ராகு உடன் இணைகிறார்.
சுபகாரியங்கள் மளமளவென நடைபெறும். உங்கள் பொருளாதார நிலை உயரப்போகிறது. கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கை நிறைய சம்பளமும் கிடைக்கப்போகிறது. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வியபாரம் லாபகரமாக நடைபெறும். தொழில் வளர்ச்சியும் வருமானமும் சீராகவே இருக்கும். திடீர் திருமணங்கள் நடைபெறும்.
பிரிந்திருந்த தம்பதியர்கள் ஒன்று சேருவீர்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திறமை வெளிப்படும். குடத்தில் இருந்த விளக்குபோல் இருந்தவர்கள் குன்றில் இட்ட விளக்கு போல பிரகாசிப்பீர்கள். புதிய கடன்கள் தள்ளுபடியாகும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாய்ப்புகள் வீடு தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் போது கவனம் தேவை. உங்களின் புகழும் பொருளதார அந்தஸ்தும் உயரப்போகிறது. வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனி வேலையில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவர்கள் விளையாட்டுகளில் காட்டும் ஆர்வத்தை படிப்பிலும் காட்ட வேண்டும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் ஆண்டாக அமைந்துள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
பரிகாரம்: மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பண வரவு அபரிமிதமாக இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications