2023ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கும்..குபேர யோகம் யாருக்கு தேடி வரப்போகுது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022ஆம் ஆண்டு முடிந்து 2023 ஆம் ஆண்டு ஆங்கில புத்தண்டு இன்னும் சில மாதங்களில் பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டு யாருக்கெல்லாம் நல்ல வேலை வாய்ப்பை தரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் யாருக்கெல்லாம் லாபம் அள்ளித்தரப்போகிறது அதன் மூலம் குபேர யோகம் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

2020ஆம் ஆண்டு முதல் உலக மக்களுக்கு சோதனைக்காலம்தான். இரண்டு ஆண்டு காலம் கொரோனா என்ற வைரஸ் பிடியில் சிக்கித்தவித்தனர். 2022ஆம் ஆண்டில் உலக மக்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர். பல நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டது என்றாலும் அச்சம்
நீங்கவில்லை. இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும் என்பதே பலரது எதிர்பார்ப்பு

இரண்டு ஆண்டு காலம் பலருக்கும் தொழிலில் பாதிப்பு வேலையிழப்பு,வருமானம் இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை என சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பிறக்கப்போகும் 2023ஆம் ஆண்டு புத்தாண்டில் யாருக்கெல்லாம் புது வேலை கிடைக்கும்? தொழில் வியாபாரம் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பொதுவான பலன்களைப் பார்க்கலாம்.

குபேர யோகம் யாருக்கு?

குபேர யோகம் யாருக்கு?

2023ஆம் ஆண்டு நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஆண்டு கோள்களின் பயணம் பலருக்கும் சாதகமாகவே உள்ளது. ஆங்கில புத்தாண்டு பிறக்கும் போது குரு பகவான் மீன ராசியில் ஆட்சி நிலையில் இருக்கிறார். ஏப்ரல் மாதம் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு இடப்பெயர்ச்சி அடைந்து ராகு உடன் இணைகிறார். சனி பகவான் மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். ஜனவரி 17ஆம் தேதி சனி பகவான் இடப்பெயர்ச்சியாகி கும்ப ராசியில் அமர்கிறார். மேஷ ராசியில் உள்ள ராகுவும், துலாம் ராசியில் உள்ள கேதுவும் அக்டோபர் மாதம் இடப்பெயர்ச்சியாகி மீன ராசிக்கும் கன்னி ராசிக்கும் நகர்கின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகிறது.

மேஷம்

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் பத்தாம் வீட்டில் இருந்து லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். விரைய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். ராகு ஜென்ம ராசியிலும் கேது களத்திர ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போகிறார். தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது. பேச்சை தொழிலாகக் கொண்டவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் கை கூடி வரப்போகிறது. புதிதாக கற்றுக்கொள்வீர்கள். வேலை வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. வேலை இல்லாம் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை உண்டு. வேலையில் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை போகிற ஆண்டாக முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

 ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. 2023ஆம் ஆண்டு உங்களுக்கு வெளிநாடு வேலை கிடைக்கும். வேறு கம்பெனிக்கு மாற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். போட்டி தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு வெற்றிகளும் அரசு வேலையும் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

மிதுனம்

மிதுனம்

சனி பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு வருகிறார். குரு பகவான் பத்தாம் வீட்டில் இருந்து லாப ஸ்தானத்தில் பயணம் செய்வார். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடந்த சில ஆண்டுகாலமாக வேலையை விட்டு ஓடி விடலாமா என்று நினைத்தீர்கள். அந்த அளவிற்கு குடைச்சல் இருந்தது. காரணம் அஷ்டம சனி, தொழில் குரு படாத பாடு படுத்தி எடுத்தது. 2023ஆம் ஆண்டு உங்களுக்கு சிரமங்கள் நீங்கி விடும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வரப்போகிற புத்தாண்டில் லாபம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவினால் உங்களின் முதலீடுகள் அனைத்தும் பல மடங்கு லாபத்தை தரப்போகிறது. நஷ்டப்பட்டு பொருளாதார சிக்கல்களை சந்தித்த பலரும் பிறக்கம்போகும் புத்தாண்டில் இழந்ததை மீட்கப்போகிறீர்கள். காரிய வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். எதிரிகளை ஓட ஓட விரட்டுவீர்கள். தொல்லைகள் முடிவுக்கு வரும். உறவுகள், சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். உங்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டில் வருமானம் அபரிமிதமாக இருக்கப்போகிறது. பல வழிகளில் இருந்தும் பணம் வரும். வேலையில் டிரான்ஸ்பர் கேட்ட இடத்திற்கு கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். பண முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஏப்ரல் மாதம் வரை குருவின் பார்வை கிடைப்பதால் நல்ல வேலையும் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். 2023 மே மாதத்திற்கு முன்பு புதிய தொழில்களை தொடங்குவது நல்லது. ரிட்டையர்மெண்ட் வயதில் இருப்பவர்களுக்குக் கூட நல்ல வேலை கிடைக்கும். விஆர்எஸ் பெற்றவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொடுத்த கடன்கள்..வரவே வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வரும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..மகிழ்ச்சியில் திளைக்கப்போகிறீர்கள். சனி, குரு, ராகு கேது சாதகமாக உள்ளதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கும் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கும் 2023ஆம் ஆண்டு நல்ல லாபம் கிடைக்கப்போகிறது. புதிதாக தொழில் தொடங்கலாம். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்


செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே..உங்களுக்கு 2023ஆம் ஆண்டில் நிறைய நற்காரியங்கள் நடைபெறப்போகிறது. இழந்த வேலைகளை திரும்ப பெறப்போகிறீர்கள். சிலருக்கு புதிதாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கும். உங்களுக்கு அலுவலகத்தில் இருந்த சிக்கல்கள் 2023ஆம் ஆண்டு முதல் முடிவுக்கு வரும். உயரதிகாரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். அரசு தேர்வுகள் எழுதியிருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். பங்குவர்த்தகத்தின் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவதற்கான யோகம் கை கூடி வந்துள்ளது. சமூகத்தில் மதிப்பு மரியாதை கைகூடி வரப்போகிறது. உங்களின் ஆசைகள் பூர்த்தியாகும் அற்புத ஆண்டாக அமைந்துள்ளது.

தனுசு

தனுசு

ஏழரை சனி முடிவுக்கு வந்து விட்டதால் உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். குரு பகவானும் உங்கள் ராசியை பார்க்கப்போகிறார். நிதி நிலைமை நன்றாக உள்ளது. புதிய தொழில்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சனிபகவானின் பார்வையால் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். இளைய சகோதர சகோதரிகளின் மூலம் பண உதவிகள் தேடி வரும். வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். அலுவலகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல புரமோசனும் கிடைக்க வாய்ப்பு தேடி வரும். உங்களின் திறமைக்கு மதிப்பு கிடைக்கும். சொத்து விற்பனை மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வேலை விசயமாக நிறைய பயணங்கள் செல்வீர்கள் அதன்மூலம் வெற்றிகள் தேடி வரும். 2023ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தப்போகிற ஆண்டாக அமைந்துள்ளது.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே.. 2023ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. எதிர்பாராத இடங்களில் இருந்து பண உதவி கிடைக்கும். செய்யும் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். சொத்துக்கள், வீடு வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டு. விவசாயம், உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். முன்னோர்கள் சொத்து கைக்கு வந்து சேரும். விருப்பங்கள் ஆசைகள் நிறைவேறும். நல்லதொரு முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+