2023 இயர் எண்டர் ஜோதிடம்: 2024 புத்தாண்டில் வேலையில் யாருக்கு மாற்றம் வரும்? லக் அடிக்குமா?
சென்னை: 2024ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. வேலை கிடைப்பதற்கும், பதவி உயர்வு கிடைப்பதற்கும் கிரகங்களின் பார்வை அவசியம். குரு, சனி, ராகு கேதுவின் பயணம் 2024ஆம் ஆண்டில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வேலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.
மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கப்போகிறது. சனி லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு, ராகு, கேது கிரகங்களின் பயணம் சாதகமாகவே உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஒருவித ஊசலாட்டத்திலேயே இருந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு தேடி வரப்போகிறது. புது வேலை: நிலையான நிரந்தரமான வேலை கிடைக்கும். தசாபுத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களின் பொருளாதார நிலைமை, பண வருமானம் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டில் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனிபகவான் நல்ல வேலையை தரப்போகிறார். லாப ராகு கொட்டி கொடுக்கப்போகிறார். புது வேலையால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
மிதுனம்: லாப குரு தொழில் வியாபாரத்தில் லாபத்தை அள்ளித்தரப்போகிறார். 10ல் ராகு பதவி யோகத்தை தரப்போகிறார். குருவின் வீட்டில் பயணம் செய்யும் ராகு அள்ளித்தரப்போகிறார். வேலையில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 2024ஆம் ஆண்டில் வேலை மாற்றம் உண்டாகும். புது வேலையும் புரமோசனும் கிடைக்கும்.
கடகம்: 2024ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி காலம். பத்தாம் வீட்டில் உள்ள குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் வியாபாரத்தில் நிறைய லாபங்களை அள்ளித்தரப்போகிறார். உங்களுடைய வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.
சிம்மம்: சனி பகவான் ஆண்டு முழுவதும் 7ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். கண்டச்சனி என்று கவலைப்பட தேவையில்லை. மே மாதத்தில் இருந்து பத்தாம் வீட்டிற்கு குரு பகவான் வரப்போவது சிறப்பு. ராகு எட்டாம் வீட்டிலும் கேது இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். வேலைக்காக வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகம் வரப்போகிறது. 2024ஆம் ஆண்டில் வேலையில் இடம் மாற்றம் ஏற்படும்.
கன்னி: பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் குரு பதவி யோகத்தை தரப்போகிறார். வேலை, தொழிலில் மாற்றம் வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். வேலை கிடைக்கும் வரைக்கும் இருக்கிற வேலையை விட வேண்டாம். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் பார்வையால் வேலையில் மாற்றமும் புரமோசனும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications