புத்தாண்டு ராசி பலன் 2024: 6 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்!.. யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றம்
சென்னை: 2024 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. எத்தனையோ எதிர்பார்ப்புகள் பலருக்கும் இருக்கும். நல்ல வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், பொருளாதார வளர்ச்சி என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. யாருடைய வீட்டில் அதிர்ஷ்ட தேவதை அடி எடுத்து வைக்கப்போகிறார் என்று பார்க்கலாம்.
மேஷம்: 2024 ஆண்டில் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை முழுவதும் மேஷ ராசிக்காரர்கள் மேல் தான் விழுகிறது. பண வருமானம் அதிகரிக்கும். வருமானமும் வந்து கொண்டே இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். புது முயற்சிகள் கைகூடும். படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் இட மாற்றமும் வரும்.

ரிஷபம்: 2024ஆம் ஆண்டு முதல் நீங்கள் தொட்டது துலங்கும். குரு பகவானின் பார்வையால் உயர் பதவிகள் தேடி வரும். உங்களுடைய குடும்பத்தில் சுபகாரியம் கைகூடி வரும். உங்களின் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமணம் தடைகள் நீங்கி நடைபெறும். வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. கோடி கோடியாக பண வரும் யோகம் தேடி வரப்போகிறது. பொருளாதார நிலையில் மிகப்பெரிய வளர்ச்சி அடையப்போகிறீர்கள்.
மிதுனம்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே..2024ஆம் ஆண்டில் உங்களுக்கு நிறைய பண வருமானம் வரும். சொந்த வீடு வாங்குவீர்கள். வீடு, மனை, வாங்கும் யோகம் தேடி வரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். பண வருமானம் அதிகரிப்பதால் கடன்கள் அடைபடும். இதுவரை கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும். இதுவரை பகையாக இருந்தவர்கள் இனி நட்பாக மாறுவார்கள். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். இந்த ஆண்டில் ஒருமுறையாவது திருச்செந்தூருக்கு சென்று பெருமாள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும் நல்லது.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி காலம் என்றாலும் குரு பகவானும் ராகுவும் கோடி கோடியாக வருமானத்தை தரப்போகிறார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும். பதவிகள் தேடி வரும் உங்கள் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். நல்ல வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை தலைமை பொறுப்புகள் தேடி வரும். சம்பள உயர்வு அதிகரிக்கும். இதுநாள் வரை தடைப்பட்ட திருமணம் நடைபெறும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியத்தில் அதிக முன்னேற்றம் வரும்.
சிம்மம்: உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருபகவான் ராசியை பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டில் குரு பகவான் அற்புதமான பதவி யோகத்தையும் அதிகார யோகத்தை தரப்போகிறார். நல்ல வேலை வாய்ப்பு அமையும் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். நிதி நிலை அற்புதமாக இருக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். கடன் பாக்கிகள் கைகூடும். புது முயற்சிகள் கை கூடும். புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கை கூடி வரும். வியாபாரம் தொழில் அற்புதமாக வளர்ச்சி அடையும். குருபகவானை வியாழக்கிழமை தரிசனம் செய்வது அற்புத யோகத்தை தரப்போகிறது.
கன்னி: 2024 ஆண்டு முழுவதும் சனி பகவானின் சாதகமான பயணத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. கோடி கோடியாக செல்வங்கள் தேடி வரும். நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். பொருளாதார நிலை மேம்படும். 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குருவின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் அதிர்ஷ்ட தேவதையின் அருள் மழை உங்களுக்கு கிடைக்கப்போகிறது.
-
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications