புத்தாண்டு ராசி பலன் 2026: மேஷம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம் (Mesham new year rasi palan):
மேஷ ராசிக்கு 12 ஆம் இடத்தில் சனி பகவான், 11 ஆம் இடத்தில் ராகு பகவான், 3 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். மே மாதம் வரை குரு பகவான் அங்கிருந்து ஜூன் மாதத்தில் ராசிக்கு 4 ஆம் இடத்துக்குச் செல்கிறார். ராசிக்கு 5 ஆம் இடத்தில் டிசம்பர் மாதம் வரை கேது பகவான் இருக்கிறார். இந்த ஆண்டில் உங்களுக்கு தொழிலில் அதிகமான லாபம் கிடைக்கும்.
புதிய வேலைவாய்ப்பு
ராசிக்கு 12 இல் சனி பகவான் இருந்து 3 ஆம் பார்வையாக 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழிலில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மூலமாக பிரபலமடையும் யோகம் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த கடன்களை அடைப்பீர்கள்.
மன நிம்மதி
மன நிம்மதி ஏற்படும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். குழந்தை இல்லாத மேஷ ராசிக்காரர்களுக்கு 5 ஆம் இடத்தில் கேது இருப்பதால் மருத்துவ சிகிச்சையின் மூலமாகவும், இயற்கையாகவும் குழந்தை பாக்கியம் பெறும் வாய்ப்புண்டு. குழந்தைகள் விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். காதல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
காதல் மலரும்
மேஷ ராசி பெண்களுக்கும், ஆண்களுக்கும் காதல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பார்ட்னர்களின் மூலமாக பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக நோய் இருப்பின் அவை தீருவதற்கான யோகம் உண்டாகும். குரு பகவான் ராசிக்கு 3 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்துக்கு உச்சமாகி செல்வதாலும், சனி பகவான் 12 இல் இருந்து 9 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தாய், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
முதுகுவலி வருவதற்கான வாய்ப்புள்ளது. எலக்ட்ரானிக் பொருள்களால் ஷாக் அடிப்பதற்கான வாய்ப்புள்ளது. கெட்ட பழக்கங்களை பழகிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பணம் அதிகளவில் இருந்தால் அதனை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. அப்படி சொல்லும்போது கண்டிப்பாக உறவினர்கள் கடன் கேட்கும் வாய்ப்பு ஏற்படும்.
நிலம் வாங்கும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வழிப் பாதையில் பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications