Puthandu Palan: ஸ்டாலின், எடப்பாடி, விஜய்.. 2026 முதலமைச்சர் ஆகப்போவது யார்.. ஜோதிடம் சொல்வதென்ன
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முக்கியமாக 2026 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், சீமான் ஆகிய தலைவர்களுக்கு கிரக நிலை எப்படி உள்ளது, முதலமைச்சர் அரியணையில் அமர யாருக்கு வாய்ப்புள்ளது என்கிற ஜோதிட அலசல் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும்.
விஜய்.. எடப்பாடி பழனிசாமி
தவெக தலைவர் விஜய் யாரும் எதிர்பாராதளவுக்கு பெரிய வளர்ச்சியை எட்டுவார். விஜய் 10 நாளுக்கு ஒருமுறை என்றில்லாமல் அடிக்கடி களத்தில் இறங்கினால் அவரே எதிர்பார்க்காத முடிவுகள் கிடைக்கும். இடைவெளிவிட்டு வருவது பெரிய வெற்றியை கொடுக்காது. விஜய் கடக ராசி என்பதால் உடன் இருப்போரிடம் கவனமாக இருக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி மாதம் 6 ஆம் தேதிற்குள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிக்க வேண்டும். எடப்பாடி கன்னி ராசி. தை மாதம் முடிவதற்குள் அவர் கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுத்து செயல்பாட்டில் வேகம் காட்டினால், அவர் பக்கம் காற்றடிக்கும்.
ஸ்டாலின்.. அண்ணாமலை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இது நல்ல நேரம். அதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு அவர் துணை நின்று பணிகளை துரிதப்படுத்தினால் முடிவு அவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஸ்டாலின் உடல் நலத்தில் மட்டும் சற்று அக்கறை எடுக்க வேண்டும்.
நயினார் நாகேந்திரன் இருந்தாலும், அண்ணாமலைக்கு பெரிய பொறுப்பு கொடுத்தால் தான் பாஜகவின் தாக்கம் பெரியளவுக்கு இருக்கும். அண்ணாமலை கடக ராசி. ஜென்மத்தில் உள்ள ராகு திடீர் அதிர்ஷ்டம் கொடுப்பதால் மிகப்பெரிய பதவி அவரை தேடி வரும். சீமான் கூட்டணியில் இல்லையென்றால் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும்.
முந்த போவது யார்
பொதுவாக கிரகங்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அதை முறியடிப்பதை பொறுத்துதான் முடிவுகள் அமையும். கடந்த சில தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதை மறந்துவிட வேண்டாம். சூரியன் மகர ராசியில் இருந்து உடனடியாக முடிவு எடுத்து களமிறங்குவோருக்கு சாதகமான முடிவுகள் இருக்கும்.
இப்போதைக்கு பந்து ஆளுங்கட்சி கையில் தான் இருக்கிறது. அதனால்தான் அனைத்து கட்சிகளும் ஜனவரி 6 - பிப்ரவரி 14 தேதிக்குள் முடிவு எடுக்க சொல்கிறேன். அந்த காலகட்டத்திற்குள் யார் வேகமாக களமறங்குகிறார்களோ அவர்கள் பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரையாக இருப்பார்கள். அந்த காலத்தில் மக்களே முடிவுகளை சொல்லிவிடுவார்கள்.












Click it and Unblock the Notifications