Puthandu Palan 2026: சந்திரனின் அருளால் கடக ராசிக்கு வரும் அதிர்ஷ்டம்..ஆடம்பர செலவுக்கு நோ சொல்லுங்க
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் (Kadagam new year rasi palan):
கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிநாதனாகிய சந்திரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் இந்த 2026 ஆம் ஆண்டு பிறப்பதால் எல்லா விஷயங்களிலும் நீங்கள் ஜெயித்துக் காமிக்கும் யோகம் உண்டாகும். பண வரவு, செல்வாக்கு, புதிய பதவி என இந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருப்பீர்கள். கடந்த ஆண்டுகளில் கை நழுவிப் போன சில வாய்ப்புகள் இந்த ஆண்டு நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்.
செலவுகளை குறைங்க
எங்கு சென்றாலும் மரியாதை உங்களுக்கு கூடிக்கொண்டே இருக்கும். பார்த்தும் பார்க்காமல் சென்றவர்கள் கூட உங்களிடம் வந்து மதித்துப் பேசும் நிலை ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கெளரவம் உயரும். 9 ஆம் இடத்தில் சனி பகவான் தொடர்ந்து இருப்பதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அவசரமான முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமித்துக் கொள்வது நல்து. குரு பகவான் மே மாதம் வரை உங்கள் ராசிக்கு 12 ஆவது இடத்தில் இருப்பதால் சுபச் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள், வெளியூர் பயணங்கள் உண்டாகும். குரு பகவான் ஜூன் மாதம் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை ராசிக்குள் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கோபம் வேண்டாம்
முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வீண் பழி சுமத்துவதற்கான வாய்ப்புள்ளதால் அதனை துடைத்து போட்டுக் கொண்டு செல்வது நல்லது. அக்டோபர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரைக்கும் ராசிக்கு 2 ஆம் வீட்டில் வந்து குரு பகவான் அமருவதால் அந்த காலகட்டம் மிகுந்த அருமையாக இருக்கும். திடீர் பண வரவுகள் எதிர்பார்க்கலாம். பெரிய பதவிகள், பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அது உங்களுக்கு அவ்வளவு நன்மையை ஏற்படுத்தாது என்பதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய் 8 ஆவது வீட்டில் பிப்ரவரி முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை மறைவதால் பணம் கொடுப்பது, ஜாமின் கையெழுத்து போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பணிச்சுமை
உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும் அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். வீடு கட்டுவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகளுக்கு திருமண யோகம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அருகில் இருக்கும் சிவன் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, சித்தர் பீடங்களில் வியாழக்கிழமை தோறும் தானம் செய்வது மேன்மையைத் தரும். கைகளை இழந்தவர்களுக்கு தானம் கொடுப்பது ஏற்றத்தை தரும்.












Click it and Unblock the Notifications