Puthandu Palan 2026: கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. திட்டமிட்டு காரியத்தை சாதிப்பீங்க
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி (Kanni new year rasi palan):
கன்னி ராசிக்கு உங்கள் ராசிநாதனாகிய புதன் 4 ஆவது வீட்டில் 3 கிரகங்களுடன் இருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. மறைந்து கிடந்த திறமைகள் வெளியில் வர ஆரம்பிக்கும். உங்களிடம் இவ்வளவு திறமையா என பிறர் சொல்லும் வகையில் வாழ்க்கை இருக்கும். 2026 ஆம் ஆண்டு முழுவதும் பண வரவு அற்புதமாக இருக்கும். வீண் செலவுகள் இருந்தாலும் இரட்டை வருமானம் வரும் வாய்ப்புள்ளது.
கூடுதல் வருமானம்
வேலையில் இருந்துகொண்டே கூடுதல் வருமானம் வரும் வேலைகளை செய்வீர்கள். குரு பகவான் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஜூன் 1 முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில் வந்து அமரப் போவதால் அந்த காலகட்டம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். திடீர் பணவரவு, செல்வாக்கு ஏற்படும். சகோதரர் வகையில் நன்மைகள் உண்டாகும்.
திருமண யோகம்
குடும்பத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும். நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். அக்டோபர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் குரு பகவான் போய் மறைகிறார். அந்த காலகட்டத்தில் ஆன்மீக நாட்டம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும்.
கவனம்
பிப்ரவரி மாதத்தில் வண்டி, வாகனங்களைப் பார்த்து பயன்படுத்துவது நல்லது. சிறு சிறு விபத்துகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிர பகவான் பலவீனமாவதால் கவனமாக இருக்க வேண்டும். கண்டகச் சனி இந்த ஆண்டு முழுவதும் இருப்பதால் கணவன், மனைவிக்குள் சந்தேகத்தால் சங்கடங்கள், பிரச்சனைகள், மனக் கசப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவி குறித்த தவறான தகவல்களை நம்பாமல் இருப்பது நல்லது.
தொழில்
வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. தனித்து தொழில் செய்வது லாபத்தை அள்ளிக் கொடுக்கும். வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். வியாபாரம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும். உத்தியோகத்தில் தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் யோகம் ஏற்படும். பிள்ளைகளின் திருமணம் சிறப்பாக முடியும்.
வழிபாடு
சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். ஸ்ரீ விநாயகர் பெருமானை வழிபாடு செய்வது உங்களுக்கு யோகத்தைக் கொடுக்கும். திருநங்கைகளுக்கு உதவுவது, தேங்காய் தானமான கொடுப்பது நற்பலன்களை அள்ளித் தரும்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications