Puthandu Palan 2026: கும்ப ராசியை வச்சு செய்ய போகும் ராகு.. குருவின் அருளால் சர்ப்ரைஸ் காத்திருக்கு
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீருமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் (Kumbam new year rasi palan):
கும்ப ராசிக்காரர்களே யோகாதிபதியான சுக்கிரனும், புதனும் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும்போது இந்த 2026 ஆம் ஆண்டு பிறப்பதால் எல்லா விஷயங்களிலும் வெற்றிகள் உண்டாகும். எதை தொட்டாலும் துலங்கும் யோகம் உண்டாகும். தடங்கலாகி பாதியில் நின்று போன காரியங்களை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.
தெளிவு உண்டாகும்
குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முகத்தில் ஒரு பொலிவு, தெளிவு ஏற்படும். அழகும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். குரு பகவான் அடுத்தடுத்து மாறவுள்ளார். மே மாதம் வரை குரு சாதகமாக இருப்பதால் மகளுக்கு திருமண யோகம் கூடி வரும் வாய்ப்புள்ளது. வீடு, மனை வாங்குவதற்கான யோகம் உண்டாகும். கோர்ட், கேஸ்களில் ஜெயிப்பீர்கள்.
சந்தோஷம்
ஜூன் மாதம் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரைக்கும் 6 ஆம் இடத்தில் மறைவதால் விபத்துகள், இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அக்டோபர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரைக்கும் 7 ஆவது வீட்டில் வந்து குரு அமருவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் புரிதல் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.
ஜெயம்
எதிர்ப்புகள் விலகி எல்லா விஷயத்திலும் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டாகும். ஸ்திர சொத்துகளான வீடு, மனைகளை வாங்குவீர்கள். உங்களுக்கு பாதச் சனி நடந்து கொண்டிருப்பதால் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அக்கறை காட்டுவது நல்லது. கண் பார்வை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
திடீர் லாபம்
வியாபாரம் இந்த வருடத்தில் மந்தமாக இருப்பதாக எண்ணம் தோன்றும். மே மாதம் வரைக்கும் வியாபாரத்தில் திடீர் லாபம் இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிக லாபங்கள் இருக்கும். இடைப்பட்ட காலத்தில் புதிதாக முதலீடு செய்வது, புதியவர்களை சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மாற்றம், முன்னேற்றம்
உத்தியோகத்தைப் பொருத்தவரை இடமாற்றம், வேலை மாற்றம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். மே மாதத்திற்குள்ளேயே புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புள்ளது.
ராசிக்குள் இருக்கும் ராகு உங்களை பாடாய் படுத்துவார். டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறுவதால் அன்று முதல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், தைரியம் பிறக்கும். எல்லா வகையிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும்.
வழிபாடு
கேதுவும் சாதகமாக மாறுவதால் கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். இந்த வருடம் முழுக்க வியாபார, உத்தியோக விஷயங்கள் அருமையாக இருக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.
வதந்திகள், விமர்சனங்கள் நிறைய வரும். அதனை கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். தூய்மைப் பணியாளர்களுக்கு உதவுவது, குருமிளகு தானம் கொடுப்பது நன்மை பயக்கும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications