புத்தாண்டு ராசி பலன் 2026: மேஷ ராசிக்கு 2026 இல் வாழ்க்கையே மாறப்போகுது.. காசு மேல காசு

Subscribe to Oneindia Tamil

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

New year rasi palan mesham

நிலம், தங்கத்தில் முதலீடு

2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுப விரயம் அதிகளவில் இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடித்து புதிய கடன்களை வாங்குவீர்கள். அனுகூலமான அமைப்பு ஏற்படும். ஏழரை சனியின் தாக்கத்தில் இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மரண பயங்கள் நீங்கும். மகிழ்ச்சியாக நிறைய நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக இருந்த சங்கடங்கள் எல்லாம் தீரும்.

தொழில் தொடங்கும் யோகம்

நிறைய பேருக்கு புதிய தொழில் தொடங்கும் ஏற்படும். புதிய உத்தியோகம் கிடைக்கும். புதிய படிப்புகளை படிப்பீர்கள். பிஹெச்டி முடிக்காதவர்கள் அதனை முடிக்கும் யோகம் உண்டு. அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசியலில் வெற்றி பெறும் யோகம் உண்டு. அரசாங்க காரியங்களில் ஜெயம் ஏற்படும். அரசு அதிகாரிகளாக பொறுப்பேற்கும் யோகம் உண்டு.

பண வரவு

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட நீண்ட நாள் கவலை ஒன்று நீங்கும். மனதில் நிம்மதி ஏற்படும். நிரந்தர பண வரவு உண்டாகும். வியாபாரத்தில் தைரியமாக இறங்குவீர்கள். பல தொழில் அமைப்பு ஏற்படும். ஆன்மீகத்தில் அனுகூலம் காணப்படும். ஆன்மீகத்தில் பெரிய பெயர், புகழ் பெறுவீர்கள். கடல் கடந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.

வீடு வாங்கும் யோகம்

கடல் கடந்து வீடு வாங்கும் யோகம், நிலம் வாங்கும் யோகம், கடல் கடந்த மக்களுடன் சேர்ந்து தொழில் அடுத்தடுத்து ஆரம்பிப்பது போன்ற அனுகூலம் ஏற்படும். அனுமன் வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். அனுமன் சாலிஷா கேட்பது, சொல்வது, நரசிம்ம காயத்ரி சொல்வது, உக்கிர தெய்வ வழிபாடு, வாராஹி காயத்ரி சொல்வது இவை அனைத்தும் மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும்.

ஆரோக்கியம்

அடிவயிறு, கால், பாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கழிவுப் பாதை சம்பந்தப்பட்ட பாதிப்பு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் காணப்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். தேவையில்லாமல் ஏதாவது சொன்னாலும் அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.

ஜெயம், சிக்கல் தீரும்

சோம்பல் அதிகமாக இருக்கும். செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, இரவில் நிம்மதியாக தூங்குவது நல்லது. தூக்கமின்மை இருந்தால் உரிய மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். சுப காரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த மன வருத்தங்கள் படிப்படியாக தீரும்.

பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். பெரிய படிப்புகள், விருதுகள் கிடைக்கும் யோகம் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+