Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Year Rasi Palan: 2026 தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா.. சினிமாவில் தொடர்வாரா… ஜாதகம் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

2026 புத்தாண்டு பலன்: 2026 புத்தாண்டு இன்னும் ஒரு நாளில் பிறக்க போகிறது. புதிய ஆண்டில் பல நல்ல விஷயங்களுக்காக எதிர்நோக்கி காத்திருப்போம். இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசியலில் இது முக்கியத்துவம் வாய்ந்த வருடம். நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி சினிமாவில் இருந்த விலகி, முழுநேர அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார். 2026 தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா, தவெக நிலை என்னவாகும், விஜய் மீண்டும் சினிமா துறையில் தொடர வாய்ப்புள்ளதா என்று அவரின் ஜாதகம் மூலம் கணிக்கப்பட்ட பதிவில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். நாளை நள்ளிரவு 2026 புத்தாண்டு பிறக்க போகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுகவும் தீவிரம் காட்டுகின்றன. திமுக எதிர்ப்பு அரசியலை தீவிரமாக கையில் எடுத்து விஜய்யும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்.

new-year-rasi-palan-2026-new-year-will-vijay-in-election-or-continue-in-cinema

விஜய்க்கு சுக்கிர திசை

ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். விஜய் வருகை தமிழ்நாடு அரசியலை சுவாரஸ்யமாக்கியுள்ளது. போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா, அவரின் முதலமைச்சர் கனவு இந்த வருடமே நிறைவேறுமா, அவர் மீண்டும் சினிமாவில் தொடர வாய்ப்புள்ளதா என்பதற்கு அவரின் ஜாதகத்தில் கணிக்கப்பட்ட ஜோதிட தொகுப்பு இதோ.

விஜய் கடக ராசி கன்னி லக்னம். அடுத்த 15 வருடங்கள் அவருக்கு சுக்கிர திசை நடக்கிறது. பொதுவாக கடக ராசிக்கு சிலர் உடனிருந்து கொண்டே தவறான வழிகளை காட்டுவார்கள். அதில் அவர் கவனமாக இருக்க வேண்டும். 2025 மே மாதம் வரை தான் அவருக்கு சற்று பிரச்சனையாக காலம். அதை கடந்துவிட்டாலே சிரமங்கள் இருக்காது. புரட்டாசியில் இருந்தே நல்ல காலம் தொடங்கிவிட்டது

நீட்சபங்க ராஜயோகம்

ற்போதைய கிரக நிலைப்படி அவர் எந்த தொகுதியில் நின்றாலும் அங்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீட்சபங்க ராஜயோகம் இருப்பதால் எந்த இடத்தில் நின்றாலும் வெற்றி பெறுவார். செல்வாக்கு அதிகமாக இருக்கும். அவருக்கு சனியின் சாரமும் நடக்கிறது. அதனால் பிரச்சாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். சனியின் சாரம் நடக்கும்போது துர்மரணங்கள் இருக்கும். பல ரூபங்களில் இருந்து பிரச்சனைகள் வரும்.

பிரச்சனைகளை எல்லாம் கடந்து மிகவும் தெளிவாக திட்டமிட்டு களத்தை அறிந்து ஒருங்கிணைந்து செயல்பட்டால், விஜய்க்கு நல்ல எதிர்காலம் உண்டு. அரசியலில் சூரியன், செவ்வாய், சனி, குரு அமைப்புகள் முக்கியம். விஜய்யின் ஜாதகப்படி சூரியன், சனி, குரு வலுவாக உள்ளனர். செவ்வாய் பலமாக இல்லை. அது சரியான நேரத்தில் தவறான முடிவு எடுப்பதற்கு வழிவகுக்கும். எனவே விஜய் முடிவு எடுக்கும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அவரின் கடக ராசியின் குரு உச்சமடைகிறார்.

குரு உச்சம்

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு அவர் உச்சமடைகிறார். கடக ராசிக்கு குரு பகவான் தான் யோகாதிபதி. இதனால் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக விஜய் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விஜய் வருவார். பிற்காலத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்துவார். தாக்கத்தை ஏற்படுத்தினாலும் 2026 ஆம் வருடத்தில் அவர் முதலமைச்சராவதற்கு வாய்ப்பு குறைவு. சுக்கிரன் திசை இருப்பதாலும், சனி வலுவாக இருப்பதாலும் அவர் தேர்தலுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+