Puthandu Palan 2026: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. இனி சிங்கப் பாதை தான்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் (Viruchigam new year rasi palan):
விருச்சிக ராசிக்காரர்களே உங்களுடைய ராசியை நேருக்கு நேராக சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது புத்தாண்டு பிறக்கிறது. அதனால், இந்த ஆண்டு முழுவதும் பிரகாசமாக இருப்பீர்கள். மனதில் ஒரு தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் முதலிடத்தைப் பிடித்துக் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
தொட்டது ஜெயம்
கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம், புரிதல் ஏற்படும். ராசிநாதன் செவ்வாய் குரு பகாவனின் பார்வையை பெற்றிருப்பதால் தெளிவான முடிவை எடுப்பீர்கள். ஆளுமைத் தன்மை, நிர்வாகத் திறமை அதிகரிக்கும். எங்கே சென்றாலும் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டாகும். 8 ஆம் இடத்தில் குரு பகவான் மறைந்திருப்பதால் மே மாதம் வரை செலவுகள் ஏற்படும். பணம் கொடுத்து ஏமாறும் சூழ்நிலை ஏற்படும்.
பணவரவு நிச்சயம்
எதுவுமே சரியாக நடக்கவில்லையே என்கிற எண்ணம் ஏற்படும். ஆனாலும், ஜூன் மாதம் முதல் ராசிக்கு 9 வது வீட்டில் குரு பகவான் வந்து அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் ஜூன் மாதம் முதல் அமோகமான காலகட்டமாக இருக்கும். ஏமாந்து போன தொகை கைக்கு வரும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். விலையுயர்ந்த தங்க நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எல்லாமே சிறப்பாக இருக்கும்.
திருமண யோகம்
ஜூன் மாதம் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை அருமையாக இருக்கும். பிள்ளைகளின் திருமணங்கள் கைகூடி வரும். அக்டோபர் 14 முதல் டிசம்பர் மாதம் வரை குரு பகவான் ராசிக்கு 10 ஆம் வீட்டிற்கு போவதால் உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலையில் இடமாற்றம், சிறு சிறு தொந்தரவுகள் வரும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உத்தியோகம் நன்றாக இருக்கும்.
சலுகைகள் கிடைக்கும்
சிறிய சிறிய சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விறுவிறுப்பு உண்டாகும், லாபகரமான சூழல் ஏற்படும். பெற்றோருக்கு அடிக்கடி செலவுகள் செய்ய வேண்டியதிருக்கும் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நண்பர்கள் விஷயத்தில் கண்காணிப்போடு இருப்பது நல்லது. டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ராசிக்கு 3 ஆம் வீட்டில் ராகு அமருகிறார். 9 ஆம் வீட்டில் கேது அமருகிறார். இதனால், திடீர் யோகம், அதிர்ஷ்டம் ஏற்படும்.
வழிபாடு
ஸ்ரீநரசிங்கப்பெருமாள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சாலையோரமாக வசிப்பவர்களுக்கு காலணி, உடை வாங்கிக் கொடுப்பது ஏற்றத்தை தரும். வேர்க்கடலை தானமாக கொடுப்பது நன்மை பயக்கும்












Click it and Unblock the Notifications