Puthandu Palan 2026: புத்தாண்டில் சொத்துகளை குவிக்கும் தனுசு ராசி.. அள்ள அள்ள பணம்.. என்ஜாய்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தனுசு புத்தாண்டு பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் வரை குருவின் பார்வை இருப்பதால் எல்லா சுப காரியங்களும் நடக்கும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். பணவரவு அற்புதமாக இருக்கும். வசதிகளைப் பெருக்குவீர்கள். பிள்ளைகளுக்கான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். ரத்தபந்த உறவுகளுக்கு, சகோதர, சகோதரிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அனுகூலத்தை செய்வீர்கள்.
சொத்துகள் வாங்கும் யோகம்
பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். ஜூன் மாதம் வரை சனியின் அமைப்பு அர்த்தாஷ்டம சனி இருப்பதால் உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும். நம்பிக்கை அதிகரிக்கும். எந்த விஷயத்தை செய்தாலும் அதில் லாபத்தைக் காண்பீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.
நகை சேர்க்கும் யோகம்
வீடு, நிலம், வண்டி, வாகனம், நகை சேர்க்கும் யோகம் உண்டாகும். பிடித்த டைமண்ட்களை வாங்கும் யோகம் உள்ளது. வாகனத்தில் அதிகமாக மாற்றங்களைச் செய்வீர்கள். காலம் முழுவதும் குரு இருப்பதால் திருமணத் தடைகள் எல்லாம் நீங்கும். ஜூன் முதல் 2 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் சுப விரய பிராப்தம் உண்டாகும். 12 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் யோகம் உண்டாகும்.
வழிபாடு
யோக பலன்கள் அதிகளவில் உங்களுக்கு கிடைக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாட்டு மக்கள் வரும் யோகம் உண்டு. வெளிநாட்டில் அதிகளவில் முதலீடுகளைச் செய்வீர்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்து கொள்வது நல்லது. சிவ வழிபாடு உங்களுக்கு அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.
பணவரவு
பண வரவு அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டதெல்லாம் துலங்கும் காலகட்டம். குரு பார்வை இருப்பதால் எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். இந்திராட்சி கவசம், ஸ்தோத்திரத்தைக் கேட்பது நன்மையை ஏற்படுத்தும். ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
-
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications