Puthandu Palan 2026: சிம்ம ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. பண மழை தான்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் சிம்ம ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சிம்மம் புத்தாண்டு பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.. அஷ்டமத்தில் சனி இருப்பதால் அச்சமடைந்து போயிருப்பீர்கள். ஜென்மத்தில் கேது இருப்பதால் விநாயகரை வழிபாடு செய்வது, காரியசித்தி மாலை மந்திரத்தைக் கேட்பது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட உபத்திரவம் ஏற்படும். படபடப்பு, ஜாயிண்டுகளில் வலி போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.
சுற்றுலா
புத்தாண்டு தொடக்கத்திலேயே பயணத்தை தொடங்கும் யோகம் உள்ளது. பாக்காத ஊர்களை எல்லாம் சுற்றி வரும் வாய்ப்பு ஏற்படும். கோளார் பதிகத்தைக் கேட்பது நன்மை பயக்கும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் நீங்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தாய், தந்தை உங்களுக்குப் பெரிய அளவில் உறுதுணையாக இருப்பார்கள். துணை உங்களுக்காக கூடி நிற்பார்கள்.
காதல் அமைப்பு
காதல் அமைப்பு நன்றாக இருக்கும். காதலி, காதலனை பற்றி நீங்கள் நிறைய தப்பாக நினைத்திருப்பீர்கள். ஆனால், அவர்கள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பார்கள். கேது இருப்பதால் மூட் ஸ்விங் பயங்கரமாக ஏற்படும். அதில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில் அற்புதமாக இருக்கும்.
சண்டை வேண்டாம்
தொழில் செய்பவர்கள் சண்டை சச்சரவுகளை செய்யாமல் இருப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். வாகனங்களில் செல்லும்போது அதிவேகமாக செல்வது, படிக்கட்டில் வரும்போது கவனக்குறைவாக வருவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இளம்வயது பெண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் விபத்துகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
கவனம்
ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவற்றை அணிந்து செல்வது நல்லது. ரத்தபந்த உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அவர்களால் பண வரவு, சொத்து வரும் யோகம் உண்டாகும். மன அழுத்தம் தீரும். பித்ரு தோஷம் நீங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு குருவே உங்கள் அஷ்டமத்தை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
அதிர்ஷ்டம் கொட்டும்
அஷ்டமத்தில் சனி இருந்தாலும் பெரும் அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடிய ராசியினர் நீங்கள்தான். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். அதிர்ஷ்டம் பெறும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டதெல்லாம் துலங்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அமையும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications